மெர்சிடிஸ் இந்தியாவின் CEO ஆட்டோவில் பயணம்... ஏன் தெரியுமா?

பொதுவாக பெருநகரங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது போக்குவரத்து நெரிசல்

சமீபத்தில் இதுபோன்ற பிரச்சனை ஒன்றில் தான் சிக்கிக்கொண்டார் மெர்சிடிஸ் இந்தியாவின் சிஇஓ
 மார்டின் ஷ்வெங்க்

தன்னுடைய அலுவலகப் பணிக்காக அவசரமாக சென்று கொண்டிருந்த நிலையில், புனேவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக மார்ட்டின் தான் பயணித்த சொகுசு காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடத்துச்சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்த ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார்

இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டா பக்கத்தில், “ உங்களது எஸ்- கிளாஸ் வாகனம் புனே சாலை நெரிசலில் சிக்கிக்கொண்டால் என்ன செய்வீர்கள்?

காரில் இருந்து இறங்கி சில கி.மீ துாரம் நடந்து ரிக்ஷாவைப் பிடிக்கலாமா? என்பது தன்னுடைய அனுபவத்தை புகைப்படத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளதோடு பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்

குறிப்பாக பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் இந்தியா சிஇஓக்கே இந்த நிலைமையா? என்றும் இவருக்கு அவசரத்தில் உதவியது நம்முடைய ஆட்டோ தான் என்றும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்

 இந்தியாவின் இந்த நிலைமையைக் கவனத்தில் கொண்டு, மக்களுக்குத் தேவையான சிறிய மற்றும் மலிவு விலையில் புதிய கார்களை வடிவமைக்கலாமே? என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளன

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...                                                                                                                                             

இன்னும்

News18Tamil.com