start exploring

இந்தியாவில் பிரபலமான ஒயின் தயாரிக்கும் திராட்சை தோட்டங்கள்.!

ஒயின் தயாரிக்கும் திராட்சைத் தோட்டங்கள் என்றாலே அமெரிக்காவும், ஐரோப்பாவும் தான் மிகவும் பிரபலமானது என்பார்கள். 

திராட்சைத் தோட்டம்

ஆனால் பிற நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் பிரபலமடைந்துள்ள சில திராட்சைத் தோட்டங்கள் எங்கெல்லாம் உள்ளது.? என்பது குறித்து நாமும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்..

இந்தியா

01

சூலா திராட்சைத் தோட்டங்கள்

நாசிக் அருகில் உள்ள நாபா பள்ளத்தாக்கில் கடந்த 1999 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது இந்த ஒயின் தயாரிக்கும் ஆலை. மது பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான மெர்குரி ஒயின் இங்கு தயாரிக்கப்படுகிறது. உலகளவில் புகழ் பெற்றுள்ள இந்த திராட்சை தோட்டங்களை காலை 11.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். கண்கவர் இடங்களுடன் இந்த ஒயின் தயாரிக்கும் ஆலையில் உணவகங்களும் இயங்கி வருகிறது.

நாசிக்

02

குரோவர் திராட்சைத் தோட்டங்கள்

கர்நாடக மாநிலம் பெங்களுக்கு அருகில் நந்தி மலையின் நிலப்பரப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது குரோவர் திராட்சைத் தோட்டங்கள். இங்கே matured Shiraz reds and Cabernet Sauvignons உற்பத்தி செய்யப்படுகிறது. வார இறுதி நாள்களில் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் இங்கு தாராளமாக செல்லலாம்.

நந்தி மலைகள்

03

புனே திராட்சைத் தோட்டம்

புனேவுக்கு அருகில் அமைந்துள்ள திராட்சை தோட்டத்தில், ஒயின் தயாரிக்கும் ஆலைகள் மட்டுமில்லாது ஸ்பா, நீச்சல் குளம் மற்றும் பார்டி ஹால் போன்ற மற்ற வசதிகளுடன் அழகான அறைகளையும் அமைந்துள்ளது. இங்கு ஒரு நாள் பயணத்தை நீங்கள் திட்டமிட விரும்பினால் ஒருவருக்கு ரூபாய் 3500 மட்டும் தான்.

இண்டேஜ் திராட்சைத் தோட்டம்

நாட்டின் மிகப் பழமையான மற்றும் இரண்டாவது பெரிய திராட்சைத் தோட்டங்களில் ஒன்றாக சாட்டா இன்டேஜ் திராட்சைத் தோட்டம் புனேவில் இருந்து 85 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த இடத்தில் 25 வகையான திராட்சைகள் விளைவிக்கப்படுவதால், பல்வேறு வகையான ஒயின்கள் இங்கு கிடைக்கிறது. குறிப்பாக white wine, red wine sparkling wine போன்றவை இங்கு கிடைக்கிறது.

04

05

ஓரி திராட்சைத் தோட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள திண்டோரியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஓரி திராட்சைத் தோட்டம். மற்ற திராட்சைத் தோட்டங்களைப் போன்று இங்கேயும் பல வகையான ஒயின்கள் தயாரிக்கப்படுவதோடு இதன் சுவையை ருசிப்பதற்கும் ஏற்ற இடங்களும் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள இதுப்போன்ற பிரபலமான திராட்சைத் தோட்டங்கள் மது பிரியர்களுக்குக்கு மட்டுமில்லாது சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு அம்சங்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

திராட்சைத் தோட்டம்

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?

Click Here