பாம்புக்கு முத்தமா ? பரிதாப நிலையில் இளைஞர்.. வீடியோ

கர்நாடகாவில் நாக பாம்புக்கு முத்தம் கொடுத்து உதட்டில் கடிவாங்கிய நபரின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது

ராஜநாகம் முதல் அனகோண்டா வரை பல வகையான பாம்புகளை மனிதர்கள் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன

இதில் பாம்பை பிடிக்கும் நபர்கள் சுற்றியிருப்பவர்களை வியக்க வைப்பதற்காக அதன் தலைப்பகுதியில் முத்தம் கொடுப்பதை பார்த்திருப்போம்

இந்த சம்பவங்களில் பாம்பால் கடிப்பட்ட நபர்கள் பலர் உண்டு. அப்படியொரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி காண்போரை பதற வைத்து வருகிறது

கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் தான் காப்பாற்றிய நாகப்பாம்பின் பின்னால் இருந்து முத்தமிடுகிறார்

தான் பிடிபட்டதால் மிகுந்த ஆக்ரோஷத்தில் இருந்த பாம்பு, திரும்பிய வேகத்தில் அவரது உதட்டில் கொத்திவிடுகிறது. இதனால் பதற்றம் அடைந்து அந்த நபர் பாம்பை விட்டுவிடுகிறார்

வீடியோவில் இருக்கும் அடையாளம் தெரியாத இளைஞர் நாகபாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்துவிட்டதாக கூறப்படுகிறது

இருப்பினும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளைக் கொஞ்சுவது போல், காட்டு விலங்குகளை சீண்டாதீர்கள், அவற்றிற்கான மரியாதையை கொடுங்கள் என விலங்கியல் ஆர்வலர்களும், வனத்துறையினரும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com