கண்கலங்க வைக்கும் இந்த வீடியோவை பாத்தீங்களா ?

குழந்தைகளின் சொர்க்கமான டிஸ்னிலேண்டில் செவித்திறன் குறைபாடுள்ள சிறுவனுக்கு மிக்கி மற்றும் மின்னி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கொடுத்த
சர்ப்ரைஸ் வீடியோ
 வைரலாகி வருகிறது

 செவித்திறன் குறைபாடு உள்ள சிறுவனுடன் மிக்கி மற்றும் மின்னி மவுஸ் சைகை மொழியில் ‘ஐ லவ் யூ’ என அன்பை பரிமாறிக்கொண்ட வீடியோ காண்போர் மனதை மெழுகு போல்
 உருக வைத்துள்ளது

 இந்த நெகிழ்ச்சி சம்பவம் 2017ம் ஆண்டு நடந்துள்ள நிலையில், அது சம்பந்தமான வீடியோவை தற்போது மீண்டும் 'குட்பிள்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது

3 வயது சிறுவனான ஃபீனிக்ஸ் ஃபாக்ஸ் அவனது குடும்பத்துடன் டிஸ்னிலேண்டிற்கு சென்றுள்ளார். சிறுவன் அப்போது தான் ஃபாக்ஸ் குடும்பத்தினாரால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்

அவரை மகிழ்விப்பதற்காகவும், குடும்பத்துடன் நெருங்கி பழகக்கூடிய சந்தர்ப்பத்திற்காகவும் அவர்கள் ஃபீனிக்ஸை டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது

தனது மகன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து புரித்துப்போன அவனுடைய வளர்ப்புத் தாய் தனது சோசியல் மீடியா பக்கத்தில், சாண்டல் ஃபாக்ஸ், "பூமியின் மகிழ்ச்சியான இடம்" என டிஸ்னிலேண்டை புகழ்ந்துள்ளார்

இந்த வீடியோ 1 லட்சத்து 30
 ஆயிரத்திற்கும் அதிகமான
லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களுடன் வைரலாகி வருகிறது

அந்த வீடியோ இதோ..

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com