ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.!

முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்செண்ட்க்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. 

ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் அனந்த் அம்பானிக்கு இன்று அம்பானி இல்லத்தில் குஜராத் பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ஆண்டிலா இல்லத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

குஜராத்தி இந்துக் குடும்பங்களால் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும் கோல் தானா மற்றும் சுனாரி விதி போன்ற பழங்கால மரபுகள் முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா, மணமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ராதிகாவையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்தார்.

அம்பானி குடும்பத்தினர் ஆர்த்தியுடன் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றனர்.

பின்னர் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் உள்ளிட்ட இருவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் நன்றாக நடைபெறவேண்டும் என கிருஷ்ண பகவானை வேண்டிக்கொண்டனர். 

பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்று கணேஷ் பூஜையுடன் நிச்சயதார்த்தத்தை தொடங்கினர்.

அதனைத் தொடர்ந்து திருமண பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். 

ஆனந்த் மற்றும் ராதிகா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மோதிரங்களை மாற்றிக்கொண்டனர், மேலும் பெரியவர்களிடம் ஆசீர்வாதங்களையும் பெற்றனர்.

ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு சமீபத்தில் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சங்கீத் நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்த்தது. இதனை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்திருந்தார்.