இனி யூடியூபில் இந்த வசதிக்கு பணம் கட்டணும்!

பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் இருக்கும் சமூக வலைதளங்களில் யூடியூப் தளமும் ஒன்று

இதில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட வீடியோ பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள் தான், அதை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் சந்தா தொகை கட்டி ப்ரீமியம் பயனாளர் என்ற தகுதியை அடைய வேண்டும்

சரி, விளம்பரங்கள் தானே, வந்தால் வந்துவிட்டு போகிறது. அதை சேர்த்து வீடியோ பார்ப்போம் என்றுதான் நீங்கள் இதுவரையிலும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். இனி அந்த எண்ணத்திற்கும் வேட்டு வைக்கும் நடவடிக்கையை தொடங்கியிருக்கிறது யூடியூப் நிறுவனம்

 பயனாளர்கள் 4கே வீடியோவை பார்க்க முயன்றபோது இத்தகைய நிபந்தனை அவர்களது ஸ்கிரீனில் தோன்றியதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, ரெடிட் சமூக வலைதளத்தில் இதுதொடர்பான புகாரை பயனாளர்கள் முன்வைத்து வருகின்றனர்

மாதத்திற்கு ரூ.129 அல்லது 3 மாதங்களுக்கு ரூ.399 அல்லது ஓராண்டுக்கு ரூ.1,290 என்ற அடிப்படையில் யூ டியூப் ப்ரீமியம் வழங்கப்படுகிறது

நீங்கள் ப்ரீமியம் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு விளம்பர இடையூறுகள் இன்றி வீடியோ பார்க்கும் வசதி கிடைக்கும்

இது தவிர பிக்சர் - இன் - பிக்சர் பிளேபேக் வசதி, யூடியூப் ப்ரீமியம் மியூஸிக் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். வீடியோக்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனிலும் பார்த்துக் கொள்ளலாம்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com