யூடியூபரின் மாத வருமானம் எவ்வளவு தெரியுமா ?

யூடியூபில் கொட்டிக் கிடக்கும் வீடியோக்களை உருவாக்குபவர்கள் அனைவருமே யூடியூபில் இருந்த பணம் சம்பாதிக்க முடியாது என்பதுதான் உண்மை

யூடியூப் கிரியேட்டர்கள் எல்லாருமே பணம் சம்பாதிக்க முடியுமா? யார் வேண்டுமானாலும் யூடியூப்பில் சேனல் தொடங்கலாம், வீடியோக்கள் பதிவேற்றலாம், தனக்கென்று ரசிகர் படையை உருவாக்கலாம் ஆனால் வருமானம் ஈட்டுவது என்பது கேள்விக்குறி

வேடிக்கைக்காக, ட்ரோல் செய்வதற்காக, பொழுதுபோக்குக்காக, அல்லது தகவல் பரிமாற்றத்துக்காக என்று எந்த காரணத்திற்கு வேண்டுமானாலும் யூடியூப் சேனல்களை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் ஒரு சிலர் அதை மிகவும் ப்ரொஃபஷனலாக நேர்த்தியாக செய்து வருகிறார்கள். அந்த வகையில், 1.5 லட்சம் ப்ரொஃபஷனல் யூடியூப் கிரியேட்டர்கள் உள்ளனர்

யூடியூப் வீடியோக்கள் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள்? வீடியோக்களைப் பொறுத்தவரை, எந்தவிதமான உள்ளடக்கங்களை பதிவேற்றுகிறார்கள், எந்த தகவல்களை பகிர்கிறார்கள், அது எவ்வளவு நபரை சென்றடைகிறது என்ற அடிப்படையில் யூடியூப்-இல் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு பணம் கிடைக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது

சாதாரணமாக 8 கோடி கிரியேட்டர்களும், தொழில் முறையாக 1.5 லட்சம் கிரியேட்டர்களும் இருக்கும் யூடியூபில், ப்ரொஃபஷனலாக உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் தோராயமாக மாதம் 16,000 ரூபாய் முதல் மாதம் 2 லட்சம் ரூபாய் வரை சம்பதிகிறார்கள்

10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருப்பவர்கள், மாதம் ₹53 லட்சம் சம்பாதிக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி இருக்கின்றனர்

ஒரே ஒரு வீடியோ அல்லது ஒரே ஒரு ஷார்ட்ஸ் போட்டாலே அது லட்சக்கணக்கான லைக்ஸ் மற்றும் வியூக்களை அள்ளும் சேனல்களை வைத்திருப்பவர்கள் மாதம் 80 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்க முடியும்

யூடியூப்வின் புதிய பரிமாணமான ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்க 50,000 கிரியேட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களில் 60 சதவீதத்தினர் பெருநகரங்களை சேர்ந்தவர்கள் இல்லை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com