இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேமிங் மானிட்டர் ..
 விலை எவ்வளவு தெரியுமா ? 

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விட மற்ற தயாரிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது

 சாம்சங் நிறுவனத்தின் பிற பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிவரும் சூழலில் தற்போது தனது புதிய தயாரிப்பான சாம்சங் ஓடிஸி ஆர்க் கேமிங் மானிட்டரை (Samsung Odyssey Ark Gaming Monitor) தற்போது அறிமுகம் செய்துள்ளது

இதன் விலை மற்றும் என்னென்ன அம்சங்கள் இதில் உள்ளது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்

சாம்சங் கேமிங் மானிட்டர் 55 அங்குல வளைந்த திரையை கொண்டுள்ளது. இது அதிக புதுப்பிப்பு விகிதத்தில் 4k தெளிவுத்திறனை வழங்குவதோடு காட்சியை நமக்கு ஏற்றவாறு சுழற்றிக்கொள்ளும் வசதியுடன் வருகிறது

QVGA தொழில்நுட்பம் மற்றும் மினி எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. 14 பிட் VA QLED டிஸ்ப்ளே, HDR 10+, AMD பிரீசின்க் பிரீமியம் ப்ரோ, 165HZ ரிப்ரெஷ் ரேட், 1 மில்லி செகண்ட் கிரே-டு- கிரே ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் 4k ரெசல்யூசன் அம்சங்கள் உள்ளது

கேம் பார் கொண்டு டிஸ்ப்ளே செட்டிங்களை மாற்றிக்கொள்ளவதோடு ஆக்டிவேட் செய்யப்பட்ட ஓடிசி ஆர்க் மூலம் நான்கு வீடியோ இன்புட்களை இயக்கக்கூடிய வசதிகள் இடம் பெற்றுள்ளது

சாம்சங் கேமிங் ஹப் மூலம் அமேசான் லூனா, மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் கிளவுட் மற்றும் என்விடிய ஜீஃபோர்ஸ் உள்ளிட்டவைகளை இயக்க முடியும். இத்துடன் டால்பி அட்மோஸ், 60 வாட் 2.2.2 சேனல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன

இந்த மானிட்டர் டைசன் ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இது ஆப்பிள் டிவி பிளஸ், டிஸ்னி பிளஸ், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்டவைகளுக்காகப்
பயன்படுத்த முடியும்

இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள சாம்சங் ஒடிசி ஆர்க் 55 இன்ச் பிளாக்‌ஷிப் கேமிங் மானிட்டர் விலை ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?