இந்த ஆப்களால் உங்க ஃபேஸ்புக் அக்கவுண்டிற்கு ஆபத்து!

டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சாஃப்ட்வேர் இல்லாமல் நம் வாழ்க்கை இனி அமையாது என்றாகிவிட்டது. குறிப்பாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களை நாம் மிக அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். இவை மூன்றுமே மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் தளங்கள் ஆகும்

டிஜிட்டலில் நாம் சந்திக்கக் கூடிய மிக முக்கிய பிரச்சினை பாதுகாப்பு சார்ந்த விஷயம் தான். எப்போது, யாரால் நமது அக்கவுண்ட் ஹேக் செய்யப்படுகிறது என்ற விவரமே தெரிந்து கொள்ள முடியாது. டூ ஸ்டெப் ஆதெண்டிகேஷன், ஓடிபி லாகின் மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை சமூக வலைதள நிறுவனங்கள் செயல்படுத்தி வந்தாலும், ஹேக்கிங் என்பது ஏதேனும் ஒரு வகையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது

நீங்கள் பயன்படுத்தும் ஆப்-களே வில்லன்கள் : விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன, ஏது என்று படித்துப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு நாம் இன்ஸ்டால் செய்யும் ஆண்டிராய்டு ஆப்கள் மற்றும் ஐஓஎஸ் ஆப்கள் போன்றவைதான் நமது சமூக வலைதளங்கள் ஹேக்கிங் செய்யப்படுவதற்கு மிக முக்கிய காரணமாகும்.

மோசடியான பல ஆப்கள், பயனாளர்களின் லாகின் விவரங்களை திருடிக் கொள்கின்றன. ஆண்டிராய்ட் மற்றும் ஐஓஎஸ் வகைகளில் இதுபோன்று 400 வகையான மோசடி ஆப்கள் இயங்கி வருகின்றன என்று மெட்டா நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக சுமார் 1 மில்லியன் ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் அவர்களது அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும் என்று மெட்டா நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது

ஆப்பிள் மற்றும் கூகுள் உதவியுடன் விழிப்புணர்வு: பயனாளர்கள் எப்படி பாதுகாப்புடன் இருக்க வேண்டும், தங்கள் அக்கவுண்ட்களை எப்படி பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆப்பிள் மற்றும் கூகுள் உதவியுடன் பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம் என்று மெட்டா நிறுவனம் தெரிவிக்கிறது

இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை ஃபேஸ்புக் நிறுவனம் பிளாக் ஒன்றில் வெளியிட்ட பதிவில், “மோசடியான ஆப்களை தெரியாமல் டவுன்லோடு செய்து தங்கள் அக்கவுண்டுகளுக்கு ஆபத்தை தேடிக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களை நாங்கள் எச்சரித்து வருகிறோம். தங்களுடைய அக்கவுண்ட்-ஐ அவர்கள் பாதுகாத்துக் கொள்ள உதவி வருகிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மோசடி ஆப்கள் எந்த ரூபத்தில் வருகின்றன : கார்டூன் இமேஜ் எடிட்டர், மியூஸிக் பிளேயர் என நாம் சாதாரணமாக பயன்படுத்தக் கூடிய ஆப்களின் வழியாகவே மோசடி நடைபெறுகிறது. இவை மோசடியானவை என்று மற்ற பயனாளர்கள் கண்டறிந்து, அதுகுறித்து ரிவியூ கொடுத்தாலும், அதனை மறைக்கும் வகையில் இவர்களே பாசிட்டிவ் ரிவியூ கொடுத்து வைக்கின்றனர்

உங்களின் லாகின் விவரங்களை திருடிய பிறகு, உங்கள் நண்பர்களுடன் சாட்டிங் செய்வது, உங்களின் தனி விவரங்களை ஆராய்வது போன்ற மோசடிகள் நடக்கின்றன

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com