இந்தியர்கள் இதற்கு தான் வாட்ஸ் அப்பை அதிகமாக யூஸ் பண்ணுறாங்கலாம்..

இந்தியாவில் உள்ள பிற சோசியல் மீடியாக்களை விட வாட்ஸ்அப் மூலமாக வணிக நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதை மக்கள் விரும்புவதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது

இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இண்டர்நெட் கனெக்‌ஷன் உள்ள அனைவரும் தவறாமல் பயன்படுத்தி வரும் ஒரு ஆப்பாக வாட்ஸ்அப் உள்ளது

குடும்ப உறவுகள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களோடு உரையாடவும், ஃபோட்டோ, வீடியோ உள்ளிட்ட மீடியாக்களை அனுப்பி வைக்கவும், அதேபோன்று டாக்குமெண்டுகளை பகிர்ந்து கொள்ளவும் வாட்ஸ்அப் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்

இந்நிலையில் லண்டனை தளமாகக் கொண்ட டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் பிராண்ட் கன்சல்டிங் நிறுவனமான காந்தார் நடத்திய ஆய்வின் முடிவுகள், வாட்ஸ்அப் உடனான இந்திய மக்களின் தொடர்பு குறித்த அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொள்ள விரும்பும் பயனர்களின் எண்ணிக்கையில் இந்திய முதலிடம் பிடித்திருப்பதாகவும், மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் போல வணிக நிறுவனங்களுடனும் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

காந்தார் நிறுவனம் "பிசினஸ் மெசேஜிங் யூஸேஜ்" என்ற தலைப்பில் வணிகங்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு மற்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிவதற்காக பல்வேறு நாடுகளில் ஆய்வு நடத்தியுள்ளது 

இந்த ஆய்வு முடிவுகளில் ஆச்சர்யப்படுத்தும் வகையில், இந்திய மக்களில் 86 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒருமுறையாவது வணிக நிறுவனங்களுக்கு மெசெஜ் அனுப்ப விரும்புவதாகவும், இது உலக அளவில் 66 சதவீதத்திற்கு சமானது என்றும் தெரிவித்துள்ளது

காந்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக ரீதியிலான தொடர்புகளுக்கு இந்திய மக்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை அதிக அளவில் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற சோசியல் மீடியாக்களை விட 400 மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்கள் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்த விரும்புவது கண்டறியப்பட்டுள்ளது

இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 70 சதவீதம் பேர், மெயில் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் தொடர்பு கொள்வதை விட வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது உடனடியாக பதிலைப்பெற உதவுவதாக கருதுகின்றனர்

இந்தியாவில் 72 சதவீத மக்கள் வணிகர்களுக்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி வந்ததாகவும், 75 சதவீதம் மக்கள் தாங்கள் குறுஞ்செய்தி அனுப்பும் வணிகர்கள் அல்லது வணிக நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com