BSNL இன் 5G சேவை -
அமைச்சர் தகவல்.!

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL வரும் நவம்பர் முதல் 4ஜி சேவையையும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 5ஜி சேவையையும் நாட்டில் துவங்கவுள்ளது 

இது குடித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.கே.புர்வார் தகவல்
 தெரிவித்து உள்ளார்

சமீபத்திய India Mobile Congress நிகழ்வில் பேசிய பி.கே.புர்வார் இந்த தகவலை தெரிவித்த நிலையில், BSNL 5G வெளியீட்டு தேதியை ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் உறுதிப்படுத்தியுள்ளார்

இந்திய மக்களுக்கு மலிவு விலையில் 5G வழங்குவதற்காக 3 தனியார் மற்றும் ஒரு பொது டெலிகாம் நிறுவனம் இருக்கும் என இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ் குறிப்பிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன

வரும் 6 மாதங்களில் நாட்டில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளில் 5ஜி சேவைகள் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கூறி உள்ளார்

BSNL இன்னும் 4G சேவையை கூட அறிமுகப்படுத்தவில்லையே, அடுத்த ஆண்டுக்குள் எப்படி 5G சேவையை நிறுவனம் வழங்க முடியும் என்று அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்

இதற்கு பதில் அளித்த அவர், 4G-யிலிருந்து 5G-க்கு மாறுவதற்கு நிறுவனத்திற்கு நீண்ட காலம் எடுக்காது. ஏனென்றால் BSNL-ன் 5G சேவையானது நான்-ஸ்டாண்டலோன் கட்டமைப்பின் மூலம் வழங்கப்படும்

அதாவது இதன் மூலம் 5G சேவைக்கென்று புதிய அமைப்புகளில் அதிக முதலீடு செய்யாமல் தற்போதுள்ள
 நெட்வொர்க் உள்கட்டமைப்பை
 பயன்படுத்தி சேவைகளை வழங்க BSNL திட்டமிட்டுள்ளது என்றார்

BSNL நிறுவனம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த கூடும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டு உள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com