இன்ஸ்டாவில் வீடியோ பார்க்க பிடிக்கலையா..? உங்களுக்காக
சூப்பரான 5 ஆப்ஸ்..

இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமாகத் தொடங்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா.?

ஆம், இதை உருவாக்கிய கெவின் சிஸ்ட்ரோம் ஆரம்பகாலத்தில் உடனடி தகவல் பரிமாற்றம் தளமாகவே உருவாக்கி இருந்தார். அதாவது, instant + telegram என்பதன் சுருக்கமே இன்ஸ்டாகிராம் என்று அழைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஸ்மார்ட்போன் புகைப்படம் எடுப்பதற்கான சமூக தளமாக இந்த செயலி கவனம் செலுத்தியிருந்தாலும், இன்ஸ்டாகிராமின் தற்போதைய நிலை ரீல்ஸ் மற்றும் குறுகிய வீடியோக்களை கொண்டதாக உள்ளது.

இதன் விளைவாக ஏற்படும் மாற்றங்களை நிறைய பேர் விரும்பலாம். ஆனால் இது பழையபடி புகைப்படத்திற்கு பேர்பெற்ற ஒரு செயலியாக வரவேண்டும் என்று பலர் விரும்பவதும் உண்டு. 

ஒருவேளை உங்களுக்கு பழைய இன்ஸ்டாகிராம் பிடித்திருந்தால் அது போன்று உள்ள நீங்கள் ஒரு உன்னதமான புகைப்படப் பகிர்வு அனுபவத்தை விரும்பினால், உங்களுக்கான சூப்பர் ஆப்ஸ் இதோ..

Be Real: இந்த ஆப் 2020-இல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இதன் பெயரைப் போலவே, "உண்மையாக இருக்க" உங்களை ஊக்குவிக்கிறது. நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் காட்ட ஒவ்வொரு நாளும் எந்த ஃபில்டர்களும் இல்லாமல் இதில் உங்கள் புகைப்படத்தைப் பகிரலாம்.

Behance : நீங்கள் ஒரு கலை துறை சார்ந்தவராக இருந்தாலோ அல்லது ஒரு தொழில்முறை கலைஞராகவோ, புகைப்படக் கலைஞராக இருந்தால், உங்கள் படைப்புப் பணிகளை வெளிப்படுத்தும் சிறந்த சமூகத் தளங்களில் பிஹான்ஸ் முக்கியமான ஒன்றாகும்.

Tumblr: இது ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான தளமாக இருந்தது. இதில் புகைப்படங்கள், மீம்கள், வீடியோக்கள் மற்றும் GIF-களைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் சொந்த வலைப்பதிவை நீங்கள் தனிப்பயனாக்கலாம் என்பது இதன் மிகப்பெரிய விற்பனையான புள்ளிகளில் ஒன்றாகும்.

VSCO: இந்த பிரபலமான பட எடிட்டிங் தளமானது ஒரு சமூக தளமாகும். 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் புகைப்படங்களைப் பகிர இது அனுமதிக்கிறது. இதில் யூசர்கள் புகைப்படங்களின் கீழ் விரும்பவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ முடியாது. 

500px: இது உங்களுக்கு கிளாசிக் அனுபவத்தை தரக்கூடும். இதில் வீடியோக்கள் இடம்பெறாது. ஆனால் புகைப்படங்களை பதிவேற்றலாம் மற்றும் கருத்து தெரிவிக்கலாம். டிஸ்கவர் பக்கத்தின் மூலம் நீங்கள் மற்ற புகைப்படக் கலைஞர்களைக் கண்டுபிடித்து அவர்களைப் பின்தொடரலாம்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com