கால்பந்து என்று சொன்னாலே, ரொனால்டோ என்று நினைக்கும் அளவுக்கு மிகச்சிறந்த வீரர். போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர், சார்மிங் இளவரசர் போலத் தோற்றமளிக்கும் டேவிட் பெக்ஹாம். விளையாட்டில் இவரின் திறன், சாதனைகள் மட்டுமல்லாமல், மற்ற பிரபலங்களைப் போல இல்லாமல், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் வெளிப்படையாக இருந்தார், இருக்கிறார்.
டேவிட் பெக்ஹாம்
90களில் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்தவர் இங்கிலாந்து வீரர் ஜாமி. ஓய்வு பெற்ற பிறகும், ரசிகர்களுக்கு ஜாமி மீதான ஈர்ப்பு குறையவில்லை.
ஜாமி ரெட்நாப்
தற்போதைய கால்பந்து போட்டி மற்றும் வீரர்களின் ரசிகர்கள் அனைவருக்குமே, ஜார்ஜ் பெஸ்ட் பற்றி நிச்சயமாக தெரிந்திருக்கும். வடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர்.
ஜார்ஜ் பெஸ்ட்
அர்செனால் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடி வந்தவர். விளையாட்டு வீரர்களுக்கான பல விருதுகளைப் பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்தார்.
தியோ வால்காட்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜெரார்டு, இவர் விளையாடிய காலத்தில் தவிர்க்க முடியாத, இவரை ஜெயிக்கவே முடியாத அளவுக்கு கடுமையான கால்பந்து வீரராக இருந்திருக்கிறார். மிகச்சிறந்த சென்டர் ஹாஃப் பிளேயர்களின் பட்டியலில் இவர் தவறாமல் இடம்பெறுவார்.
ஜெரார்டு பிக்
ஸ்பெயின் நாட்டு அணியின் ஸ்ட்ரைக்கராக பிரபலம் ஆனவர் ஃபெர்னாண்டோ. நாட்டின் மாட்ரிட் அணிக்காக விளையாடவில்லை. இருப்பினும், ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளார். ஆண்களுக்கும் பூனை கண் அழகாகவும் ஹாட்டாகவும் இருக்கும்..
ஃபெர்ணான்டோ லோரென்டே
அழகழகான விளையாட்டு வீரர்களை மொத்தமாக ஸ்பெயினும், இங்கிலாந்தும் குத்தகைக்கு எடுத்து வைத்தது போல, ஸ்பெயின் நாட்டில் மற்றொரு வீரர், ஐடோர் ஓசியோ. கிரேக் கடவுள் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு மிகவும் ஹேண்ட்சம்மான பிளேயர் இவர்.
ஐடோர் ஓசியோ
ஒலிவியர் ஜிரோடை இதுவரை அறியாதவர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டிருப்பார்கள். தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில், ஜிரோட் தனது அணி வெற்றி பெற முக்கிய விளையாட்டு வீரராக இருந்திருக்கிறார்.
ஒலிவியர் ஜிரோட்
எப்போதும் தாடியுடன் ‘rugged’ லுக்கில் காணப்படும் அலிசன் ராம்செஸ் பெக்கர், உலகின் மிகச்சிறந்த கோல்கீப்பராக புகழ் பெற்றுள்ளார். தற்போது, இவர் லிவர்பூல் பிரிமீயம் லீக் கிளப்புக்காகவும், பிரேசில் தேசிய அணிக்கும் விளையாடி வருகிறார்.
அலிசன் பெக்கர்