திருப்பதியில் மொட்டை அடிக்க காரணம் இதுதான்..

இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்று மக்கள் அனைவராலும் கூறப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளி கொண்டிருக்கும் வெங்கடேச பெருமாள்..

அப்படிப்பட்ட திருப்பதி கோவில் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்

பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப் பால், நெய், மோர் , தயிர், துளசி இலைகள் இவை எல்லாமே ஒரு கிராமத்திலிருந்து பிரத்யேகமாகக் கொண்டு வரப்படுகின்றன. அந்த கிராமமே பெருமாளுக்காக மட்டுமே வேலை பார்க்கிறது

 இது திருப்பதியிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு இதுவரை யாரும் சென்றதில்லை. அனுமதித்ததில்லை. கோவில் அர்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்

பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டிருக்கும் முடி உண்மையானது என சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பூமிக்கு வந்தபோது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியில் சிலவற்றை இழந்துள்ளார்

இதை அறிந்த காந்தர்வ பேரரசி நீலா தேவி  தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு அவர் தலையில் சூடிக்கொண்டுள்ளார்

இதனால் தான் பெருமாளை தரிசிக்கும் ஒவ்வொருவரும் திருப்பதி சென்றால் மொட்டை அடித்து தங்கள் முடியை தானமாக பெருமாளுக்கு கொடுப்பதாக சொல்லப்படுகிறது

கோயிலுக்கு சென்றால் இப்படித்தான் வழிபட வேண்டும்..

Click Here