Published November 19, 2025
இறால் மாரினேட் செய்ய தேவையானவை : இறால் – 1/2 கிலோ தயிர் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு மிளகாய் தூள் – சிறிதளவு உப்பு – சிறிதளவு
மற்ற பொருட்கள் : பாசுமதி அரிசி – 2 கப் பெரிய வெங்காயம் – 2 பழுத்த தக்காளி – 1 பச்சை மிளகாய் – 3 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் கறிமசாலா தூள் – 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா – 1/2 டீஸ்பூன் சோம்பு தூள் – 1 டீஸ்பூன் கிராம்பு – 3
மற்ற பொருட்கள் : பட்டை – 1 பிரியாணி இலை – 1 ஏலக்காய் – 3 அன்னாசிப்பூ – 1 எண்ணெய் – தேவைக்கேற்ப நெய் – தேவைக்கேற்ப கொத்தமல்லி இலை – கைப்பிடி புதினா – கைப்பிடி உப்பு – தேவையான அளவு
முதலில் பாசுமதி நன்றாக அலசி சுமார் அரை மணிநேரம் ஊறவைக்கவும். பின்னர் சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் போட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்
அடுத்து அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, சோம்பு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்
பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கலந்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்
இஞ்சி, பூண்டின் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து வதக்கி பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிமசாலா தூள், பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கவும்
தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மாரினேட் செய்த இறாலை சேர்த்து ஒரு முறை கிளறி விடவும். (குறிப்பு – அதிகம் வதக்கக் கூடாது)
அடுத்து அதில் 2 கப் அரிசிக்கு மூன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்ததும் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு நன்றாக கலந்து மீண்டும் ஒரு கொதி விடவும்
பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடி அரிசி முக்கால் பதம் வேகும் வரை சமைக்கவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் அதை 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி தம்மில் போடவும்
இப்போது மூடியை திறந்து பார்த்தால் வீடே மணக்கும் சுவையான செட்டிநாடு ஸ்டைல் இறால் பிரியாணி சாப்பிட தயாராக இருக்கும்..
கறிவேப்பிலையில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் இனி தூக்கி எறிய மாட்டீர்கள்.!