சித்தூர் பாலக் சிக்கன் செய்வது எப்படி?

ரெசிபி

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாலக்கீரையில் சிக்கன் சேர்த்து சமைத்து பாருங்கள். இதுவரை சுவைக்காத தனிச்சுவையை அனுபவிப்பீர்கள்

ரெஸ்டாரண்டுகளிலும் அதிகமாக விரும்பி உண்ணக்கூடிய பாலக் சிக்கனை வீட்டில் சமைத்து சாப்பிட எளிமையான ரெசிபி உங்களுக்காக...

சிக்கன் - கால் கிலோ பெரிய தக்காளி - ஒன்று எண்ணெய்  - ஒரு மேஜைக் கரண்டி   
கெட்டி தயிர் - 200 கிராம் பச்சை மிளகாய் - 4  இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம்
பாலக்கீரை - ஒரு கட்டு         மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு

தேவையான பொருள்கள்

முதலில் சிக்கனை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பாலக்கீரை, வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

செய்முறை

ஒரு கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு லேசாக வதக்கவும்

பிறகு நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் உடன் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பாலக் கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்

அதன் பின்னர் சிக்கனை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். இப்போது தயிரையும் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்

 பின்னர் கரம் மசாலா, உப்பு ஆகியவற்றையும் சேர்க்கவும்

மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். இப்போது சுவையான சித்தூர்
 பாலக் சிக்கன் ரெடி

மொறு மொறுனு மசால் வடை செய்ய ரெசிபி.!