குளிர்காலத்தில் BP அதிகரிப்பது ஏன்..?

பொதுவாக குளிர்காலத்தில் நம்முடைய ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவும், கோடைகாலத்தில் குறைவாகவும் இருக்கும்

குளிர்காலத்தில் நிலவும் குறைந்த வெப்பநிலை நம் ரத்த நாளங்களை தற்காலிகமாக சுருங்க செய்கிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது

குளிர்காலத்தில் நம்முடைய ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க சில எளிய டிப்ஸ்கள் இதோ..

வழக்கமான ஒர்கவுட்ஸ்: நாளொன்றுக்கு 30-45 நிமிடங்கள் வழக்கமான உடல் செயல்பாடுகளை குளிர்காலத்திலும் செய்வது முக்கியம்

ஜங்க் ஃபுட்ஸ், ஆல்கஹால் மற்றும் காஃபினுக்கு நோ: குளிர்காலத்தில் பீட்சா, பாஸ்தா போன்ற ஃபாஸ்ட் ஃபுட்ஸ்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்

வைட்டமின் டி :குளிர் சீசனில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்து கொள்வது, வெயிலில் சிறிது நேரம் செலவிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள்
வைக்க உதவும்

உயர் ரத்த அழுத்த அறிகுறிகள் :கடுமையான தலைவலி, மூக்கில் இருந்து ரத்தம் வருவது, அதீத சோர்வு, இதயத்துடிப்பு சீரற்று இருப்பது, மூச்சு திணறல் ஆகியவை ஆகும்

உயர் ரத்த அழுத்த சிக்கல் உள்ளவர்கள் குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

சிறுநீரக செயலிழப்பை உணர்த்தும் அறிகுறிகள்.!