பெண்கள் 30 வயதை கடந்த பிறகு தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சரியான நேரத்தில் எடுக்கும் சில நடவடிக்கைகள் பெண்கள் தங்கள் 30-களில் இருக்கும் போது ஆரோக்கியமாக மற்றும் அழகாக இருக்க உதவும்.
30 வயதை கடந்த பிறகு பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய சில முக்கிய பரிசோதனைகள் இதோ..
பெண்களுக்கு செர்விக்கல் கேன்சர் (cervical cancer) அதாவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய இந்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது.
இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அறியப்படும் சில வகையான HPV-லிருந்து DNA அல்லது RNA-க்காக செல்கள் சோதிக்கப்படும் ஒரு ஆய்வக சோதனையாகும்.
BRCA 1 & 2 மியூட்டேஷன்ஸ் அல்லது ஃபர்ஸ்ட் டிகிரி ரிலேட்டிவில் உள்ள மியூட்டேஷன்ஸ் போன்ற மார்பக புற்றுநோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ள பெண்கள் 30 வயதிற்கு பிறகு மேமோகிராம் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தயாராக இருக்கிறார்களா அல்லது கர்ப்பத்திற்கு முன் அவர்களது உடலில் உள்ள சர்க்கரை அல்லது தைராய்டு அளவுகள் சரி செய்யப்பட வேண்டுமா என்பதை கண்டறியும் சில சோதனைகள் இதில் அடங்கும்.
லிப்பிட் ப்ரொஃபைல் என்பது கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற கொழுப்புகளில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ரத்த பரிசோதனைகளின் குழு ஆகும்.
பெண்கள் தங்களின் ஹீமோகுளோபின் மற்றும் தைராய்டு ப்ரொஃபைலை அறிந்து கொள்வது ஆரம்பகால கண்டறிதல், சரியான நேர சிகிச்சை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும்.