நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தான் நீரிழிவு நோய் (Diabetes) என கூறுகிறோம்.
ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோய் (type 2 diabetes) அதிகமாக இளைஞர்களை தாக்குவதாக கூறப்பட்டுள்ளது.
சுமார் 204 நாடுகளின் நடத்திய ஆய்வில், 1990 முதல் 2019 வரை டைப் 2 நீரிழிவு நோயின் தாக்கம் இளைஞர்கள் (15 முதல் 39 வயது வரை) மத்தியில் 56% உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், காற்று மாசுபாடு மற்றொரு பெரிய காரணியாக கூறப்படுகிறது. டைப் 2 நீரழிவு நோய்க்கு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்தது.
கடந்த 2 ஆண்டுகளில் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மரபியல், உடல் செயல்பாடு இல்லாமை & அதிகரித்த மன அழுத்தம் ஆகும்.
இளைஞரின் பெற்றோரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவு நோயாளியாக இருந்தால், அந்த இளைஞருக்கு நீரிழிவு நோய் இருப்பதற்கு 40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்
கூறுகின்றனர்.
ஒருவேளை, தாய், தந்தை இருவரும் நீரிழிவு நோயாளியாக இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு
உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தவிர, அதிக கலோரி உணவை உட்கொள்வது, குறைந்த உடல் இயக்கம் மற்றும் மன அழுத்தம் போன்றவை இளைஞர்களுக்கு (ஆண் மற்றும் பெண்) நீரழிவு நோய் ஏற்பட முக்கிய காரணம் என
மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சராசரியாக ஒருவர் 2 - 3 மாதங்கள் வரை மட்டுமே நீரழிவு நோய்க்கான அறிகுறிகள் தென்படாமல் இருக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், நீரிழிவு நோய் முதுமை தொடர்பானது மற்றும் இளைஞர்களுக்கு வராது என்ற
கட்டுக்கதை நம்புகின்றனர்.
ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா என்பதைக் குறிக்கும் ஒரே சோதனை HbA1C ஆகும். இதன் விகிதம் 5.7 மற்றும் 6.5-க்கு இடையில் இருந்தால், பாதிக்கப்பட்ட நபருக்கு நீரிழிவு இருப்பதை அறிய காலம்
எடுக்கும்.
நாள்பட்ட நீரிழிவு சிறுநீரக நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பல அபாயங்களை அதிகரிக்கிறது. இது நரம்புகளை சேதப்படுத்துவதுடன், பார்வை மங்குதல், கேட்கும் திறன், உடல் இயக்கம் மற்றும் வாய் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
நீரிழிவு நோய் தனிநபரின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம் என மருத்துவ வல்லுநர்கள்
கூறுகின்றனர்.