குளிர்கால பிரச்சனைகளுக்கு உதவும் டாப் 5 சூப்பர் ஃபுட்ஸ்.!

குளிர்கால நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உணவின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய 5 சூப்பர் ஃபுட் உணவுகளை பார்க்கலாம். 

இஞ்சி : இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் நிறைவாக உள்ளது. அதோடு அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் குளிர்கால தொற்றுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள இஞ்சி சிறந்த வீட்டு மருந்தாகும்.

மஞ்சள் : மஞ்சளின் மகத்துவத்தை அனைவரும் அறிவார்கள். இதன் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் குளிர்கால பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். எனவே அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.

துளசி : குளிர்கால சுவாசப்பிரச்சனை, நுரையீரல் ஆரோக்கியத்திற்கு துளசி பயனுள்ளதாக இருக்கும். எனவே தினமும் 4-5 துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள் அல்லது கொதிக்க வைத்து பானமாகவும் அருந்தலாம்.

பாதாம் : உடலுக்கு அத்தியாவசிய தேவையான மெக்னீசியம், புரோட்டீன், ரிபோப்ளேவின், ஸிங்க், வைட்டமின் ஈ என பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது பாதாம். தினமும் 3 பாதாம் ஊற வைத்தோ அல்லது அரைத்து பாதாம் பாலாகவோ பருக நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.

பூண்டு : நோய் தொற்று கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. பூண்டில் வைட்டமின் சி, பி, ஃபோலேட் மற்றும் ஸிங்க் போன்ற பண்புகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். எனவே சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் பூண்டு உதவும்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com