சிக்கனை எப்படி பார்த்து
வாங்க வேண்டும்..?
உங்களுக்கான டிப்ஸ் இதோ.!

சிக்கன் கடையில் கண் முன்னே சிக்கனை சுத்தம் செய்து வாங்கி வந்த நிலை மாறி, வாசனை கூட இல்லாமல் ஏ.சி ஸ்டோர்களாக சிக்கன்
கடைகள் மாறிவிட்டன.

இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அங்கு விற்கப்படும் சிக்கன் ஃபிரெஷானதா என்கிற கேள்வி பலரிடத்திலும் உண்டு. அதேபோல் நாம் சமைப்பதற்கு ஏற்ப முன்பே வெட்டி பேக் செய்தும் வைத்திருப்பார்கள்.

சிக்கன் ஆர்டர் செய்து வரும்போதும் அவை நன்கு பேக் செய்யப்பட்டு ஒரு துளி இரத்தம் கூட இல்லாமல் வரும். இது சமைப்பதற்கு ஏதுவாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியத்திற்கு..?

இப்படி சுத்தமான சிக்கன் எது, ஃபிரெஷான சிக்கன் எது என்பதை கண்டறிய நீங்கள் திணறினால் உங்களுக்கான டிப்ஸ்தான் இது...

சிக்கன் பிங் நிறத்திலும், அதிக தண்ணீர் இல்லாமலும் இருந்தால் அது ஃபிரெஷான சிக்கன். அப்படி அதில் அதிகமாக தண்ணீர் இருக்கிறது எனில் அதன் ஃபிரெஷ் தன்மையை தக்க வைக்க நிரப்பப்பட்டுள்ளதாக அர்த்தம்.

ஃபிரெஷான சிக்கன் எனில் அதன் தோல் மென்மையாக இருக்கும். அதை கண்டறிய சிக்கனை அழுத்திப் பாருங்கள். பின் அதன் தோல் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிடும். அப்படி வந்தால் அது ஃபிரெஷான சிக்கன்.

சிக்கனின் தோற்றம் ஒரு விதமான சாம்பல் நிறத்தில் இருந்தால் அது ஃபிரெஷான சிக்கன் இல்லை.
அதன் சதைப்பகுதி பிங் நிறத்தில்
இருந்தால் அது ஃபிரெஷான
 சிக்கன் என்று அர்த்தம்.

நீங்கள் பிரித்து கழுவும்போதே வாசனையை கண்டுபிடித்து விடலாம். சிக்கனின் தரத்தை கண்டறிய சுலபமான வழியும் கூட. அப்படி கழுவும்போது ஒரு வித துர்நாற்றம் வீசினால் அது
 ஃபிரெஷ் சிக்கன் இல்லை.

நீங்கள் சிக்கனை நன்கு கவனித்தால் தெரியும். சிக்கன் சதையில் பச்சை நிறம் அல்லது கருப்பு நிறத்தில் தென்பட்டால் அது பழைய சிக்கன் அல்லது தொற்று ஏற்பட்ட
சிக்கன் என்று அர்த்தம்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com