கண் கருவளையங்களை முற்றிலுமாக போக்க எளிய வீட்டு வைத்திய முறைகள்.!
மரபு ரீதியிலான காரணங்கள், தூக்கமின்மை, அலர்ஜி, நீர்ச்சத்து குறைபாடு உள்பட பல காரணங்களால் கருவளையம் உண்டாகலாம்.
கருவளையத்தை முழுதாக நீக்குவது சவால் நிறைந்த விஷயமாக இருந்தாலும், கீழ்காணும் ஆலோசனைகளை பின்பற்றினால் ஓரளவுக்கு அதன் பாதிப்புகளை குறைக்க முடியும்.
ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் இல்லை என்றால் அதன் காரணமாக கண்களை சுற்றியிலும் கருவளையம் உண்டாகக் கூடும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியமாகும்.
போதுமான தூக்கம்
01
நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதை நமது சருமம் காண்பித்துக் கொடுக்கும். பொதுவாக உதடுகளில் வெடிப்பு தென்படும் & கருவளையம் அடர்த்தியானதாக காட்சியளிக்கும். நாள் முழுவதும் தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
நீர்ச்சத்து குறைபாடு
02
அலர்ஜி காரணமாக முகம் உப்பலாக காட்சியளிக்கும் & முகத்தில் கண்களை சுற்றியிலும் நிறம் குறையத் தொடங்கும். உங்களுக்கு ஏதேனும் உணவு அல்லது அழகுசாதனப் பொருட்கள் அலர்ஜியை ஏற்படுத்தினால் அவற்றை தவிர்க்கவும்.
அலர்ஜிகள்
03
வாட்டி வதைக்கின்ற கடுமையான வெப்ப சூழலில் அலைந்து திரிவதாலும் கூட கருவளையங்கள் ஏற்படலாம். இதை தடுக்க நீங்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம் அல்லது கண்களை சுற்றியுள்ள வீக்கத்தை குறைக்க ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்யலாம்.
சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு
04
காஃபின், விட்டமின் கே அல்லது ரெட்டினால் போன்றவற்றை மூலப் பொருட்களாகக் கொண்ட ஐ க்ரீம் பயன்படுத்துவது நல்ல மாற்றங்களை தர தொடங்கும். இயற்கையான பொருளை விரும்புபவர்கள் கற்றாழை ஜெல் கொண்டு கருவளையப் பகுதியில் மசாஜ் செய்யலாம்.
ஐ க்ரீம் பயன்பாடு
05
உங்கள் கண்களுக்கு கீழிருக்கும் கருவளையம் மிக அடர்த்தியாகவும், பார்த்துமே தெரியக்கூடிய அளவுக்கு மோசமானதாகவும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக முக அழக்குக்கலை நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும். அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளலாம்.
மருத்துவ சிகிச்சை
06
கண்களை சுற்றியிலும் வெள்ளரிக்காய் வைத்துக் கொள்ளலாம் அல்லது ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த டீ அல்லது காஃபி பைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம்.
இயற்கையான வழிமுறைகள்
07
பாதாம் எண்ணெய், ரோஸ்வாட்டர், தக்காளிச் சாறு போன்றவற்றை பருத்தி துணியில் நனைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
இயற்கையான வழிமுறைகள்
இதய ஆரோக்கியம் முதல் முடி வளர்ச்சி வரை தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்.!