செய்வது எப்படி

மட்டன் சால்னா

பிரியாணி, தோசை,  பரோட்டா, இட்லி,  சப்பாத்திக்கு
நல்ல சைடிஸ்ஸாக மட்டன் சால்னா இருக்கும்.

மணமணக்கும் மட்டன் சால்னா செய்வது எப்படி தெரியுமா?

தேவையான அளவு மட்டன் எடுத்துக்கொள்ளவும் . அத்துடன் தாளிப்பதற்கு... பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளவும்.

01

துவரம் பருப்பு , பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு  மட்டன் ஆகியவை  தேவைக்கு ஏற்ப எடுத்து கொள்ள வேண்டும்.

02

இத்துடன் தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, ஆகியவற்றை அரைத்து  கொள்ள வேண்டும்.

03

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு சொன்ன அனைத்தையும் போட்டு தாளிக்க வேண்டும் .

04

 அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

05

இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து, வதக்க வேண்டும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். 

06

மட்டனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து  5 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். துவரம் பருப்பை சேர்த்து, தேவையான தண்ணீரையும் சேர்த்து, குக்கரை மூடி விசில் விட்டு இறக்கவும்

07

10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து , அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து, பச்சை வாசனை போக குழம்பை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் மட்டன் சால்னா ரெடி..

08

மட்டன் சால்னா பிரியாணி, தோசை பரோட்டா, இட்லி, சப்பாத்திக்கு நல்ல சைடிஷ்ஷாக இருக்கும்.

09

Want More
Stories
Like This?

Click Here