சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு ஏற்படுமா.?

நம் அன்றாட வாழ்வில் காபி, டீ, பால், ஜூஸ், இனிப்பு வகைகள் என பல வகைகளில் நாம் சர்க்கரையை பயன்படுத்தி வருகிறோம். 

சர்க்கரை நம் உடலுக்கு ஆரோக்கியமற்றது அல்ல, ஆனால் அதை அதிகப்படியாக எடுத்துக்கொள்வதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை விட இயற்கையாக தயாரான சர்க்கரையை உட்கொள்வது சிறந்தது.

உதாரணமாக பால் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் இயற்கையாக சர்க்கரை இருக்கிறது. அதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.

எனவே இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று நிச்சயமாக கூற முடியாது.

ஜூஸ் வகைகள், கோக் வகைகள், சாக்லேட்கள், கேக்குகள், இனிப்பு சேர்க்கப்பட்ட தானியங்கள், ஜாம்கள், கெட்ச்அப், பிஸ்கட்கள் போன்ற பேக் செய்யப்பட்ட & பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதிக சர்க்கரை உட்கொள்வது இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. 

2,000 கலோரிகள் உட்கொள்ளும் ஒரு வயது வந்த நபர் 50 கிராம் சர்க்கரையை எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன. 

பெண்கள் 25 கிராம் அல்லது 6 டீஸ்பூன் சர்க்கரை உட்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள் தினமும் 36 கிராம் அல்லது 9 டீஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றன.

அடிக்கடி சர்க்கரை அதிகமாக பயன்படுத்தும் போது மூளையை தூண்டி ஒருவிதமான மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அதிகப்படியான சர்க்கரை உட்கொள்வது நரம்பியல் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இது போதைப்பொருள் பயன்பாடு போன்றதாகக் கூட இருக்கலாம். எனவே சர்க்கரையை அளவோடு எடுத்துக்கொண்டு நலமோடு வாழ்வோம்.

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?