நட்சத்திர பழம் சாப்பிடுவதால்
கிடைக்கும் பலன்கள்.!

ஸ்டார் ஃப்ரூட் என்னும் நட்சத்திரப் பழம் சமவெளியில் விளையக் கூடியது ஆகும். மலைப்பிரதேசங்களில் விளையக் கூடிய இந்த பழத்தை தமிழில் விளிம்பிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதிக நீர்ச்சத்து கொண்ட பழமான ஸ்டார் ஃப்ரூடில் கலோரி சத்து மிக, மிக குறைவு. அதேபோல கொழுப்புச்சத்து குறைவாகவே உள்ளது.

விட்டமின் பி, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, எண்ணற்ற ஆண்டி ஆக்சிடண்டுகள் இந்த பழத்தில் நிறைந்துள்ளது.

இந்த பழத்தில் நார்ச்சத்து சற்று அதிகமிருப்பதால் நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனை தீருவதற்கு உதவியாக இருக்கும். நன்மை தரக் கூடிய நிறைய நுண்ணுயிர்கள் வளர வகை செய்யும்.

உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகள் தான் இதய நோய்களுக்கான அடிப்படை ஆகும். நட்சத்திரப் பழத்தில் உள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்தானது நம் உடலின் கொழுப்புகளையும் கரைக்கக் கூடியது. 

மிக குறைவான கலோரி மற்றும் நார்ச்சத்து கொண்டிருப்பதால் இவை வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதன் காரணமாக உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்திடும்.

நம் உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நட்சத்திர பழத்தில் உள்ளன. நம் ரத்தத்தில் செல்லக் கூடிய கெட்ட கொழுப்பு துகள்களை கட்டுப்படுத்தக் கூடியது இந்தப் பழம்.

நம் உடலுக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதில் செல்களின் அழிவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதில் உள்ள வைட்டமின் சி, பி கரோடினீன், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை இருப்பதால் செல்களின் அழிவை தடுக்கிறது.

மெக்சீனிசியம், இரும்புச்சத்து, ஜிங்க், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ள நட்சத்திர பழங்கள் நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். 

அடிக்கடி ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவர்கள், மீண்டும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க இந்த பழத்தை சாப்பிடலாம்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com