கோவாவில் உள்ள அகோண்டா பீச், ஆடம்பரமான தங்குமிடங்களுடன் கூடிய அழகிய, அமைதியான & அற்புதமான கடற்கரையாகும். சிறந்த உணவு & பானங்களை வழங்கும் கடற்கரை குடில்களால் சூழப்பட்டுள்ள இந்த இடம் பீச் ஹாலிடேவிற்கு ஏற்றது.
இந்த மடாலயம் கடல் மட்டத்திலிருந்து 3870 மீ உயரத்தில் அமைந்துள்ளது. காதலோடு சாகச பயணத்தை விரும்பும் தம்பதிகளுக்கானது இந்த மடாலயம்.
அமைதியான மாலை நேரங்களில் மகிழ்ச்சியான காதல் சூழலில் ரொமான்டிக்காக நேரத்தை செலவிட விரும்பும் ஜோடிகளுக்கு ஏற்ற இடம் கேரளாவின் ஆலப்புழா.
உங்கள் வேலண்டைன் ட்ரிப் நம் தென்னிந்தியாவில் தான் என்றால் வேடிக்கை, சாகசம், மெதுவான பயணம் மற்றும் பல அனுபவங்களை ஒருசேர ஒரே இடத்தில் வழங்கும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி ஒரு சிறந்த இடமாகும்.
கோவாவை விட வித்தியாசமான பீச் ஹாலிடே-வை விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த காதலர் தினத்திற்கான ட்ரிப்பாக அந்தமானுக்கு செல்வதை கருத்தில் கொள்ள வேண்டும். இவை இந்தியாவின் மிக அழகான, அமைதியான கடற்கரைகளை கொண்ட அற்புத இடமாகும்.
உங்கள் பார்ட்னரிடம் இந்த காதலர் தினத்தில் உங்கள் இருவரின் திருமண திட்டத்தை முன்மொழிய நீங்கள் திட்டமிட்டால், அதற்கேற்ற சரியான பின்னணிக்காக கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.
காதலர் தினத்தில் இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் சத்தீஸ்கரின் மிக அழகான சித்ரகோட்டிற்குச் சென்று உங்கள் பார்ட்னருடன் படகு சவாரியும் செய்யலாம்.
காதலர் தினத்தன்று லேக் வியூவை பார்த்து கொண்டே எழுந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள்! உலகெங்கிலும் உள்ள தம்பதிகளால் விரும்பப்படும் மிக அழகான ஏரி இது.