இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு குட்பை சொல்லும் டாப் 5 உணவுகள்..!

பொதுவாக மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்கள் முதல் 32 நாட்கள் இடைவெளியில் வரக்கூடியதாகும். ஒவ்வொரு மாதமும் இந்த இடைவெளியானது சீரான அளவில் வரும்.

ஒவ்வொரு மாதமும் நீங்கள் மாதவிலக்கு அடையும் முதல் நாளிலிருந்து இந்த சுழற்சி நாட்கள் கணக்கிடப்படுகிறது. இந்த சுழற்சி நீண்டதாகவோ அல்லது குறுகியதாகவோ இருக்கும் பட்சத்தில் அதுவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி என்று குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக பெண்களின் உடலில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த பிரச்சனை ஏற்படும். அதேபோல ஸ்ட்ரெஸ், உடல் பருமன், தைராய்டு, பிசிஓடி, பிறப்பு கட்டுப்பாடு மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை ஏற்படும்.

இந்த சிக்கலை எதிர்கொள்ளும் பெண்களுக்கு கர்ப்பப்பையில் வலி, பசி இழப்பு, மார்பகங்களில் வலி, வயிறு, தோள்பட்டை, கால் மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் வலி, அதிக சோர்வு, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

வீட்டிலேயே இருக்கக்கூடிய எளிய முறை சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலமாக இந்த பிரச்சனைகளில் இருந்து பெண்கள் தப்பிக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

வெந்தய தண்ணீர் : வெந்தய தண்ணீர் அருந்துவதன் மூலமாக உங்களுக்கு சீரான இடைவெளியில் மாதவிலக்கு நிகழும். சிறிது வெந்தயம் & தண்ணீர் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி அருந்தவும். அப்படி இல்லை என்றால் இரவு முழுவதும் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கவும்.

பப்பாளிக்காய் : பப்பாளிக்காயை தயிருடன் கலந்து சாப்பிட்டால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, அதன் விளைவாக சரியான தருணத்தில் மாதவிலக்கு ஏற்படும். இதை நீங்கள் தினசரி சாப்பிடலாம் அல்லது மாதவிலக்கு சுழற்சி ஏற்பட வேண்டிய தினத்திற்கு சில நாட்கள் முன்பாக சாப்பிடலாம். ஒருவேளை பப்பாளி காய் கிடைக்கவில்லை என்றால் பப்பாளி பழமும் சாப்பிடலாம்.

சீரகம் : செரிமான கோளாறு, வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய சீரக விதையானது உங்களின் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். ஒரு கப் தண்ணீரில் சிறிது சீரகம் போட்டு கொதிக்க வைத்து அது வற்றி வந்ததும், அதை ஆறவைத்து குடிக்கலாம். தினசரி இரண்டு அல்லது மூன்று முறை இதனை அருந்தலாம்.

அன்னாசிப்பழம் : மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த பழம் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். மற்ற தீர்வுகளை காட்டிலும் இது உங்களுக்கு எளிமையானதாகவும் கூட இருக்கலாம். இதை சாப்பிட்டால் சரியான தருணத்தில் மாதவிலக்கு ஏற்படுவது மட்டுமல்லாமல் மாதவிலக்கு காலத்தில் உங்கள் உடலில் ஏற்படும் வலி, பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இன்னும் பார்க்க

இந்த ஸ்டோரி உங்களுக்கு பிடிச்சிருக்கா.?