குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ மிட்டாய் வீட்டிலேயே செய்வது எப்படி.?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாம்பழ சீசன் வந்துவிட்டது

காரம் மற்றும் இனிப்பு சுவை கொண்ட மாம்பழ மிட்டாய் என்றால் யாருக்கு தான் பிடிக்காது

அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த மாம்பழ மிட்டாயை இனி வீட்டிலேயே செய்து எப்போது வேண்டுமானாலும் சுவைக்கலாம். ரெசிபி இதோ..

2-3 மாம்பழம், 2 கப் தண்ணீர், ½ கப் சர்க்கரை, ஏலக்காய் தூள், 1 டீஸ்பூன் மிளகு, 1 1/2 டீஸ்பூன் கல் உப்பு, 2 டீஸ்பூன் தூள் சர்க்கரை

தேவையான பொருட்கள்

மாம்பழங்களைக் நன்கு கழுவி ஊற வைத்து பின், அதன் தோலை உரித்து எடுக்கவும்

1

தோலுரித்த மாம்பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

2

பிறகு கடாயில் தண்ணீர் சேர்த்து, தண்ணீர் போதுமான அளவு சூடானதும் சர்க்கரை கலந்து அந்த பாகைக் கிளறிக் கொண்டே இருக்கவும்

3

வெப்பத்தைக் குறைத்து, மாம்பழங்களை வெதுவெதுப்பான சர்க்கரை பாகில் போட்டு அதன் பின்னர் அவற்றை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும்

4

மாம்பழங்களை ஆறவைத்து அதில் கல் உப்பு, தூள் சர்க்கரை, கருப்பு மிளகு சேர்த்து நன்கு கலக்கியவுடன் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்

5

வெட்டியா துண்டுகளை தட்டில் பரப்பி 2-3 நாட்கள் வெயிலில் உலர விடவும். மாறாக மாம்பழத் துண்டுகளை உலர வைக்க Air Fry அல்லது Bake முறையையும் பயன்படுத்தலாம்

6

இப்போது தாயார் செய்த மாம்பழ மிட்டாயை காற்று புகாத ஜாரில் வைக்கவும். சீக்கிரம் கெடாமல் இருக்க  குளிர் உலர்ந்த இடத்தில் or குளிர்சாதன பெட்டியில் கூட வைக்கலாம்

7

பாலைவனத்தில் பிறந்த மண மணக்கும் 'பிரியாணி'யின் வரலாறு.!

click here