கர்ப்பம் தரிக்க எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்?

கரு நிற்க உடலுறவு வைத்துக்கொண்டாலே போதுமானது என்றாலும் அதை எத்தனை முறை செய்ய வேண்டும்..? எப்போது செய்ய வேண்டும்..? எந்த பொசிஷனில் செய்ய வேண்டும்? என்றெல்லாம் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிகள் இருக்கின்றன

பல நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொள்ளக்கூடாது

 பல முறை செக்ஸ் வைத்துக்கொண்டால் கருத்தரித்துவிடலாம் என்பது கற்பனையான நம்பிக்கை

உண்மை என்னவெனில்
அடிக்கடி உடலுறவு கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடும்

குழந்தை வேண்டும் என முயற்சி செய்யும் தம்பதிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்வதால் பலன் பெறலாம்

பெண்களுக்கு கரு நிற்பதற்கு எல்லா நாட்களும் சாதகமாக இருக்காது. அவர்களுடைய கருப்பை , அண்டவிடுப்பு, மாதவிடாய் இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டுதான் முயற்சி
செய்ய வேண்டும்

அண்டவிடுப்பின் பொதுவான காலம் 28 நாட்களாகும். அதாவது மாதவிடாய் சுழற்சி முடிந்து 14 வது நாள் இது நிகழும்

இது மாதவிடாய் சுழற்சி வருவதற்கு மத்திய நாட்களில் உருவாகிறது. அதாவது மாதவிடாய் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்போ அல்லது நான்கு நாட்களுக்குள்ளோ நிகழும்.இந்த அண்டவிடுப்பின் போது முட்டை வெளியேறும்

அவை கருப்பை குழாய்க்கு (fallopian tube) சென்று தேங்கியிருக்கும். இந்த சமயத்தில் விந்தணுக்கள் பயணித்து உள்ளே செல்லும்போது காத்திருக்கும் முட்டையால் அவை ஈர்க்கப்படலாம்

அப்போது அது கரு முட்டையாக உருவாகி கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன

இந்த பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவரை சாப்பிடவே கூடாதாம்..