இதய ஆரோக்கியம்
முதல் முடி வளர்ச்சி வரை தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்.!

உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பலரும் அதன் விதைகளை சாப்பிடாமல் தவிர்த்து விடுவோம். ஆனால், உண்மையில் அது பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்பது
தெரியுமா.?

தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு.

உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. இது நேரடியாக இதயத்தோடு தொடர்பு கொண்டது என்பதால் இதய ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது. 

இந்த ஒட்டுமொத்த மினரல் சத்துக்களின் ஆற்றல் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் சீராக்குகிறது.

தர்பூசணி சாப்பிட்டதும் அது வெளியிடும் ஆசிட் உடலின் செயல்பாடுகளை சீராக்கும். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

தர்பூசணி விதைகளை வெயிலில் காய வைத்து வறுத்து சாப்பிடலாம். தர்பூசனி விதைகளில் பர்பி செய்யலாம். 

வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம். பொடியாக்கியும் சாப்பிடலாம். விதைகளை அரைத்து watermelon seed shake, watermelon seed butter செய்து சாப்பிடலாம்.

தர்பூசணி உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி சருமத்தை பாதுகாக்கவும் உதவும். தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். 

தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதற்கான முக்கிய காரணங்கள்.!

click here