கோடை காலத்தில் அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாக லெமன் ஜூஸ் இருக்கிறது
லெமன் ஜூஸ் சுவையாக இருப்பதோடு உடலுக்கும் பல நன்மைகளை தருகிறது
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க லெமன் ஜூஸ் உதவுகிறது
இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது
எடை குறைக்க விரும்புவோர் காலையில் லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது
இதில் அடங்கி இருக்கும் வைட்டமின் சி எடை இழப்புக்கு வழிவகுக்கும் கொழுப்புகளின் ஆக்சிஜனேற்றத்திற்கும் உதவுகிறது
லெமன் ஜூஸ் உடலில் நீர்ச்சத்தை மேம்படுத்துகிறது
தண்ணீரை குடித்துக்கொண்டே இருந்தால் சலித்துவிடும். எனவே லெமன் ஜூஸை எடுத்துக்கொள்ளும் போது தண்ணீர் உட்கொள்ளல் எளிதாகிறது
உங்கள் நாளை வெதுவெதுப்பான லெமன் ஜூஸ் குடிப்பதன் மூலம் துவங்கினால் மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க உதவும்
லெமன் ஜூஸ் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனின் அளவை அதிகரித்து பளப்பளப்பான சருமத்திற்கு உதவுகிறது
வெப் ஸ்டோரீஸ்
பார்க்க...
இன்னும்