ஆப்பிள் சீடர் வினிகரில் இத்தனை நன்மைகள் இருக்கா ?

உடலுக்கு பல விதமான நன்மைகளை பெற வேண்டும் என்றால் நிச்சயமாக நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்ளலாம். இதில், என்னென்ன பலன்கள் இருக்கு என்று தெரியுமா ?

ஆப்பிள் சீடர் வினிகர் என்றால் என்ன? பெயரில் இருப்பதை போலவே இது ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். ஆப்பிள்களை நறுக்கி, அரைத்து, அதை புளிக்க வைத்து, வடிகட்டி ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கப்படுகிறது

உடல் பருமன் குறையும் : நம் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்து இருப்பதால் தான் உடல் பருமனாக காட்சியளிக்கிறது. ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொண்டால், இந்தக் கொழுப்புகள் கரைந்து, நம் உடல் சீரான நிலையில் காட்சியளிக்கும்

கொழுப்பை கரைக்கும் :நம் இதய ஆரோக்கியம் கெடுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவை கெட்ட கொழுப்புகள் ஆகும்.எனினும், நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகர் அருந்தும் பட்சத்தில் இந்தக் கொழுப்பு வெகுவாகக் கரையும்

பசியை கட்டுப்படுத்துகிறது : உணவு வேளைக்கு சிறிது நேரம் முன்பாக நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொண்டால் வயிற்றில் உள்ள ஆசிட் அளவை இது மட்டுப்படுத்தும்.இதன் எதிரொலியாக உங்களுக்கு பசி உணர்வு குறையும். 

பளபளப்பான சருமம் மற்றும் முடி : ஆப்பிள் சீடர் வினிகர் அருந்துவது அல்லது அதனை தண்ணீரில் கலக்கி அப்ளை செய்வதன் மூலமாக நம் சருமம் மற்றும் முடி ஆகியவை
 பளபளப்பாக மாறும்

தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் : தினசரி காலை வேளையில், ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வினிகர் சேர்த்து அருந்தலாம்

ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீர் சேர்க்காமல் அல்லது கொதிக்க வைக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டாம். அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு இது நல்ல பலன் தரும்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com