உடல் எடையை சட்டென குறைக்க நெல்லிக்காயை இப்படி சாப்பிடுங்க..
வெயிட் ஆயிட்டேனோ? என்ன செய்தால் உடல் எடைக்குறையும்.. ஜிம்மிற்கு போகலாமா? இல்லை சாப்பாட்டின் அளவைக் குறைக்கலாமா? என பல கேள்விகள் நம்மில் தோன்றும்
உடல் எடையை குறைப்பில் முக்கிய பங்காற்றும் நெல்லிக்காய் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..
நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், டானின்கள், பாலிபினால்கள், நார்ச்சத்துக்கள், ஹைப்போலி பிடெமிக் பண்புகள் போன்றவை அதிகளவில் உள்ளது
இவை அனைத்தும் உடல் எடை குறைப்பிற்கு மிகுந்தப் பயனுள்ளதாக உள்ளது
பெரும்பாலும் நெல்லிக்காயை உப்பு மற்றும் மிளகாய் வைத்து சாப்பிடுவோம் அல்லது ஊறுகாய் தயாரித்து சாப்பிடுவோம். ஆனால் இதன் சத்து முற்றிலும் குறையாத வகையில் சாப்பிட வேண்டும் என்றால், நெல்லிக்காயை ஜூஸாக பருகலாம்
இதற்கு நீங்கள் முதலில் இரண்டு நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்
நன்றாக அரைப்பதற்காக சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இதனையடுத்து வடிகட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும்
இதை அப்படியே சாப்பிடலாம். சிறிதளவு உப்பு சேர்த்தும் பருகலாம்
இன்சுலின் செடியின்
மருத்துவ குணங்கள்
பற்றி தெரியுமா?