முருங்கைக்காயில் இருக்கும் இந்த 7 நன்மைகளை பற்றி தெரியுமா..?

சாம்பார் , காரக்குழம்பு என ஏதோ ஒரு வகையில் முருங்கைக்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்வோம்

சீசனே இல்லை என்றாலும் முருங்கைக்காயை தேடி அலைந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு
 ஃபேன் பேஸ் இங்கு உண்டு

இப்படி அதன் சுவையை அறிந்த நீங்கள் அதன் நன்மைகளையும் தெரிஞ்சுக்கிட்டா நல்லது. எனவே முருங்கைக்காயில் கிடைக்கும் 7 நன்மைகள் இதோ

இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது : இரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான நன்மை

செரிமானத்தை மேம்படுத்துகிறது : உடலுக்கு தேவையான நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை உள்ளடியக்கியதால் செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது

சுவாசநோய்களுடன் போராடுகிறது : முருங்கைக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை
எதிர்த்துப் போராட உதவுகிறது

எலும்புகளை பலப்படுத்தும் : முருங்கைக்காயில் கால்சியம்
மற்றும் இரும்புச் சத்து இருப்பது எலும்புகளுக்கு அதிக நன்மை சேர்க்கிறது

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் : நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த ஆதாரம் முருங்கைக்காய். அந்த வகையில் இருமல், சளி போன்ற தொற்று பாதிப்புகளுக்கு முருங்கைக்காயை சாப்பிடுவது பக்கபலம்

இரத்தத்தை சுத்தப்படுத்தும் : ஆன்டி பயாடிக் ஏஜெண்டாக முருங்கைக்காய் செயல்படுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது

சருமத்திற்கு நல்லது : முருங்கைக்காய் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப்
போராட உதவுகிறது

புற்றுநோய் முதல்
 கொலஸ்ட்ரால் வரை... ஏலக்காயில் இருக்கும் மருத்துவகுணங்கள்.!