ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அவை ரத்த நாளங்களை சுருங்க வைத்து உடலில் உறுப்புகளுக்கு ரத்தம் கடத்தப்படுவதை தடுக்கிறது.
இது சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தானதாக முடியலாம். பொதுவாகவே ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால் உடலின் பல பாகங்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும்.
சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகாமல் இருக்க நமது உடல் எடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவில் கவனம் செலுத்துவதும், உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதும், சரியான உடல் எடையை பின்பற்றுவதும் சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க உதவும்.
புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற பழக்கங்களையும் கைவிட வேண்டும்.