சுகர் உள்ளவர்கள் கோடையில் கற்றாழை ஜூஸ் தினமும் குடித்தால் கன்ட்ரோல் ஆகுமா.?

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் அதிகரிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனை பொதுவாக சர்க்கரை நோய் என்று நாம் அழைக்கிறோம். 

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், நாம் செய்துகொண்டிருக்கும் வேலை, பின்பற்றும் வாழ்க்கை முறை ஆகியவையாகும்.

நீரிழிவு நோய்க்கான மருந்துகள் எளிதில் கிடைத்தாலும், உணவுப்பழக்கங்கள் மற்றும் இயற்கையான சில வழிமுறைகளைப் பின்பற்றி கட்டுப்படுத்த முயற்சித்தால் நல்லது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. 

கற்றாழை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் பளபளப்புத்தன்மையையும் அதிகரிக்கிறது.

கற்றாழை ஜூஸ் மற்றும் ஜெல் ஆகியவை இயற்கையாகவே ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.

இதனை உணவாக எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், மருந்து மாத்திரைகள் அல்லது மற்ற ஜூஸ்களைக் காட்டிலும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் பார்க்க முடியும். 

எடை மற்றும் கொழுப்புகளை குறைப்பதிலும் அலுவேரா பயன்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் காட்டிலும் இதில் ஏற்படும் பக்க விளைவுகள் மிகக் குறைவு என்றும், அவை தாங்கக்கூடிய அளவில் மட்டுமே இருக்குமாம்.

சர்க்கரை நோயின் ஆரம்பக் கட்டத்தை கண்டுபிடித்தவுடனே கற்றாழையை எடுத்துக்கொண்டால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

அதேவேளையில், முன்கூட்டியே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மோசமான பின்விளைவுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பயனுள்ளவையாக இருக்கும். 

சர்க்கரையின் அளவைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும், மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். கற்றாழை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவு குறித்தும் மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது.

வைட்டமின் K குறைபாட்டை சரி செய்ய உதவும் உணவுகள்.!

click here