சோள மாவு கெட்டி தன்மையை கொடுக்க மட்டுமே பயன்படுகிறதே தவிர அதில் ஊட்டச்சத்துக்கள் ஒன்றுமே இல்லை.
இங்கே கூறப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்த பிறகு கடாயில் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
நறுக்கி வைத்த கேரட், குடைமிளகாய் ஆகிய காய்கறிகளை அதிக சூட்டில் வைத்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும். பின்னர் 2 கப் தண்ணீர் ஊற்றி அதிக சூட்டில் கொதிக்க விடவும்.
இதற்கிடையில் 1/4 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 2tbsp கோதுமை மாவை கலக்கவும். கொதி வந்தபின் கலக்கி வைத்த கோதுமை மாவை கடாயில் ஊற்றவும்.
எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு பொடி, கொத்தமல்லி இலைகள் சேர்த்து 5 நிமிடம் அடுப்பிலேயே மிதமான முதல் அதிக சூட்டில் வைக்கவும்.
இப்போது ஆரோக்கியமான சுவையான சூப் தயார். இதை brown bread toast உடனும் சேர்த்து சாப்பிடலாம்.