தொப்பையை குறைக்க உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது..!

தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும், வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.

நார்ச்சத்து நிறைந்த உணவு :
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்பு மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்து முக்கியம்.

News18

முழு தானியங்கள், ஓட்ஸ், கேரட், முள்ளங்கி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளும், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் கொய்யா போன்ற பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

கிரீன் டீகிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை வயிற்று கொழுப்பை குறைக்க நிச்சயம் உதவும். 

News18

எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலமாக்க கிரீன் டீ  சிறந்த ஆயுதம். இது ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.

நடைபயிற்சி: அதிகப்படியான வயிற்று கொழுப்பு உள்ளவர்களுக்கு இது மிகவும் பொதுவாகக் சொல்லப்படும் ஆலோசனையாகும், 

News18

குண்டாக இருப்பவர்களுக்கு தமனிகள் அடைப்பு மற்றும் இதய செயலிழப்பு அபாயம் அதிகம் உள்ளது. எனவே, நடைபயிற்சி அத்தகைய அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.

சைக்கிள் ஓட்டுதல் : கால்கள், வயிற்று தசைகள், கொழுப்பு படிவுகளுக்கு சைக்கிள் ஓட்டுவதால் அழுத்தம் ஏற்படுகிறது, தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 

News18

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நமது கால் தசைகளை நன்றாக வலி இல்லாமல் வைத்துக்கொள்ளவும் சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த வழியாகும்.

 தொப்பை கொழுப்பிலிருந்து விடுபட விரும்புவோர், எலுமிச்சை சாறு தேன்  கலந்து காலையில் வெது வெதுப்பான நீரைப் பருகலாம்

News18

சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், கல்லீரல் மற்றும் உடலின் இதர பாகங்களில் தேங்கியிருந்த டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேறிவிடும்.

நிறைய தகவலுக்கு

உடல்நலம் தொடர்பான