வீட்டிலேயே கேக் எப்படி செய்யலாம்.? டிப்ஸ் இதோ.!

கேக் செய்வதில் உள்ள பெரிய தொல்லையே நீங்கள் ஏதாவது சிறு தவறு செய்தாலும் அது மொத்த கேக்கையும் கெடுத்து விடும். 

எனவே நீங்கள் கேக் செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களைப்
பற்றி இங்கே பார்ப்போம்.

எந்தெந்த பொருட்களை எந்த அளவில் எப்போது சேர்க்க வேண்டும் என்பதை மிக சரியாக சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு அதிகப்படியான மாவை சேர்க்கும்போது கேக் மிக அடர்த்தியாக மாறி சாப்பிடுவதற்கு மிகவும் கடினமாகிவிடும்.

பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கொண்ட உட்பொருட்களை மாவுடன் கலக்கும்போது அவை கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. இதனால் அவை காற்று குமிழ்களை உண்டாக்கி கேக்கை மிக இலகுவாகவும் புஸு புஸுவென மாற்றுகிறது.

அதேசமயம் உங்கள் லிவிங் ஏஜென்ட்களின் தரத்தையும் அவை காலாவதியாகும் நாளையும் கணக்கில் வைத்து அவை பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கேக்கிற்கு அழகையும் சுவையையும் கொடுத்து அதனை முழுமையாக்குவது அதன் மீது தடவப்படும் கிரீமை வெண்ணெயையும் சர்க்கரையும் சேர்த்து நன்றாக அடித்து கலக்கி மென்மையான உருவாக்க வேண்டும். 

அவ்வாறு உருவாக்கிய பின்பு அது கெட்டி படுவதற்குள் மிகச் சரியான நேரத்தில் சரியான வடிவத்தில் அதனை கேக்கில் தடவ வேண்டும். 

அவ்வாறு செய்யும்போது கேக்கில் உள்ள காற்று குமிழ்கள் வெளியேறாமலும் வெளியே இருக்கும் காற்று கேக்கில் நுழையாமலும் சரியாக அப்ளை செய்ய வேண்டும். இதனால் கேக் நன்றாக உப்பி மிகவும் மென்மையாக இருக்கும்.

ஒரு சுவையான கேக்கின் பஞ்சு போன்ற தன்மையையும் அதன் மென்மையையும் தீர்மானிப்பது அந்த கேக் செய்யப்படும் மாவு ஆகும். அந்த மாவின் தரத்தினை தீர்மானிப்பது அதனுடன் கலக்கப்படும் முட்டைகள்.

சரியான அளவில் சரியான விகிதத்தில் முட்டைகளை அடித்து கேக் செய்யும் மாவுடன் கலக்க வேண்டும். அறை வெப்ப நிலையில் இதனை நீங்கள் செய்யும் போது எத்தனை முட்டைகள் கலக்க வேண்டும் எந்த நேரத்தில் கலக்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவு தேவை.

அதிகப்படியான முட்டைகளை கலந்து விட்டால் மாவு மிகவும் அடர்த்தியாகி உண்பதற்கு கடினமாகவும் முட்டையின் வாசனை அதிகமாகி முகம் சுழிக்கும் படி வைத்து விடும்.

மைக்ரோவேவ் அவனில் கேக்கை வைக்கும் போது அது சரியாக சமைப்பதற்கு ஏற்ற வெப்பநிலையில் வைக்க வேண்டும். அது கூடவோ அல்லது குறையவோ இருந்தாலும் மொத்த கேக்கும் நாசமாகிவிடும்.

இங்கே குறிப்பிட்ட அனைத்தையும் நீங்கள் சரிவர செய்தீர்கள் என்றால் கடைகளில் கிடைப்பது போலவே சுவையான கேக்கை வீட்டிலே உண்டு மகிழலாம்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com