நீண்ட நாள் வாழ ஆசையா ? அப்ப உணவில் இந்த பொருட்களை சேர்க்கவே சேர்க்காதீங்க..

உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்து கொள்ள சீரான ஊட்டச்சத்து மிக்க டயட்டை பின்பற்றுவது அவசியமாகிறது

ஆனால் உணவு பொருளின் சுவை, நிறம், கவர்ச்சிகரமான தோற்றத்தை ஏற்படுத்த மற்றும் ஆயுளை அதிகரிக்க பல ரசாயன கலவைகள் சேர்க்கப்படுகின்றன

ஆரோக்கியமாக இருக்க நம் உணவில் தவிர்க்க வேண்டிய சில பொருட்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

சோடியம் நைட்ரைட்: பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரேட்ஸ் மற்றும் நைட்ரைட்ஸ் (nitrites) ஒரு ப்ரிசர்வேட்டிவாக பயன்படுத்தப்படுகிறது.நைட்ரைட்ஸ் மற்றும் நைட்ரோசமைன் கலக்கப்பட்ட உணவுகளை அதிக எடுப்பது வயிற்று புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன

ரீஃபைன்ட் வெஜிடபிள் ஆயில்: ஒமேகா-6 பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மிதமான அளவில் எடுத்து கொண்டால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை அதிகம் எடுத்து கொண்டால் ஆசிட் ரிஃப்லெக்ஸ் சிக்கலை ஏற்படுத்தும்

வெள்ளை சர்க்கரை: சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கலாம். மனச்சோர்வு, டிமென்ஷியா, கல்லீரல் நோய் மற்றும் சில வகையான புற்றுநோய் அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன

மைதா: பரோட்டா உட்பட பல துரித உணவுகளில் மைதா முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைதாவை வழக்கமாக உட்கொள்பவர்கள் எடை அதிகரிப்பு, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு, ஹை கொலஸ்ட்ரால் உள்ளிட்டவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது

ஈஸ்ட் சாறு: சீஸ், சோயா சாஸ் மற்றும் ஸ்னாக்ஸ்களில் உப்பு சுவையை வழங்க ஈஸ்ட் சாறு பயன்படுத்தப்படுகிறது. உணவில் சேர்க்கப்படும் சிறிய அளவு சோடியம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் ரத்த அழுத்தம் அல்லது சோடியம் அளவைக் கட்டுப்படுத்த வேறு உடல்நிலை காரணமாக இருந்தால் ஈஸ்ட் சாறு தவிர்க்கப்பட வேண்டும்

செயற்கை உணவு நிறம்: பல ஆய்வுகள் செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் குழந்தைகளில் நடத்தை பிரச்சனைகள்,அறிவாற்றல் குறைபாடுகளை ஏற்படுத்தும் என கூறுகின்றன

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com