வெர்சடைல் உணவு என்று கூறப்படும் காய்கறிகளில், காலிஃபிளவருக்கு முதலிடத்தையே கொடுக்கலாம்.
காலிஃபிளவரில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது மற்றும் பெரும்பாலான உணவுகளில் இல்லாத வைட்டமின் கே என்ற அரிதான வைட்டமினும் இதில் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இது மிக மிக கலோரி குறைந்த ஒரு காய்கறியாகும். எனவே எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் காலிஃபிளவரை பலரும் சாப்பிடலாம்.
ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்று கூறப்படும் அளவுக்கு காலிஃப்ளவர் சாப்பிடுவதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள்
இருக்கின்றன.
க்ருசிஃபெராஸ் காய்கறிகள் என்ற காய்கறிகளின் வகையை சேர்ந்த காலிஃப்ளவரை அதிகமாக சாப்பிட்டால் இந்த ஐந்து பிரச்னைகள் ஏற்படலாம்.
காலிஃபிளவரில் ரஃபினோஸ் என்ற மிக மிக கடினமான ஒரு குளுக்கோஸ் இருக்கிறது. பெரும் குடலால் இந்த குளுக்கோசை அவ்வளவு எளிதாக செரிமானம் செய்ய முடியாது.
எனவே வயிற்றில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் இதை ஃபெர்மன்ட் செய்து, பிறகு செரிமானம் ஆகும். எனவே நீங்கள் காலிஃபிளவர் அதிகமாக சாப்பிடும் பொழுது இந்த ஃபெர்மெண்டேஷன் ஆகும் சமயத்தில் வயிறு உப்பசம் மற்றும் வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான கோளாறு ஏற்படும்.
காலிஃபிளவர் முட்டைகோஸ் உள்ளிட்ட ஒருசில உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை இன்னும் மந்தமாக்கிவிடும்.
அடிக்கடி அலர்ஜி ஏற்படும் நபர்கள் அல்லது நீடித்த அலர்ஜி தொந்தரவு இருப்பவர்கள் காலிஃபிளவரை தவிர்த்து விட வேண்டும். ஒரு சிலருக்கு இதை சாப்பிட்டால் உடனடியாக சருமத்தில் அலர்ஜி, வீக்கம், அல்லது மூச்சு திணறல் ஆகியவை ஏற்படலாம்.
பிளட் தின்னிங் அதாவது ரத்தத்தின் அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்பவர்கள் காலிஃபிளவரை அதிகமாக சாப்பிடக்கூடாது. இந்த மருந்தை உட்கொள்பவர்கள் அதிக அளவு காலிஃபிளவரை சாப்பிட்டால் பிளட் கிளாட் ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாக விளையும்.
காலிஃப்ளவர் நார்சத்து நிறைந்த உணவு என்பது ஒருபக்கம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், அதிக அளவில் நீங்கள் சாப்பிடும் பொழுது உங்களுக்கு பசி எடுக்காமல் வயிறு மந்தமாக இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.
ஏற்கனவே எடை மெலிந்து இருப்பவர்கள் அல்லது எடை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகமாக காலிஃப்ளவரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.