கோங்குரா என்று அழைக்கப்படும் புளிச்ச கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் நிறைந்த கீரைகளுள் ஒன்று. இந்த தொக்கை சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அலாதியாக இருக்கும்
முதலில் புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காய வைக்கவும். அதன் பின்னர் புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊற
வைத்துக் கொள்ளவும்
செய்முறை
பிறகு, ஒரு பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்து, அவை ஆறிய பின் மிக்சியில் இட்டு அரைத்து கொள்ளவும்
பின்னர் புளி தண்ணீர் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்
இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கீரையை இட்டு நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் வற்றும்வரை வதக்கி கொள்ளவும்
அதன்பின்னர், மீதமுள்ள எண்ணெய்யில் கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் ஆகிவற்றை சேர்த்து முன்னர் வதக்கியுள்ள கீரையோடு சேர்க்கவும்
எண்ணெய் சூடாக இருக்கும் போதே இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும்
அதன் பின்னர் அந்த கலவையை நன்றாக கிளறினால் கோங்குரா தொக்கு ரெடி