நடிகர் மனைவியின் உயிரை பறித்த பேலியோ டயட்..! பக்கவிளைவுகளும்.. காரணங்களும்.!

பொதுவாக பேலியோ டயட் உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டயட் முறையில் புரோட்டீன் சத்து அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.

மீன், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்களை பேலியோ டயட்டில் சாப்பிடலாம். ஆனால் தானிய உணவுகள், பால் சார்ந்த அனைத்து உணவுகளும் தவிர்க்கப்படும்

பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியதர்ஷினி
(43 வயது) பேலியோ டயட்டால் இறந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவர் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்காக பேலியோ டயட் பின்பற்றியுள்ளார். இறுதியில் அந்த டயட்டே நீரிழிவு நோய் அதிகரிக்க காரணமாகி சிகிச்சை பலனின்றி
உயிரிழந்ததாக கூறப்படுகிறது

இந்த டயட்டில் புரோட்டீன் சத்துதான் அதிகமாக எடுத்துக்கொள்வதால் விட்டமின் சத்துக்களின் குறைபாடு உள்ளது. குறிப்பாக பால் பொருட்களை தவிர்ப்பதால் கால்சியம் சத்து மற்றும் விட்டமின் டி சத்து இரண்டுமே கிடைக்காமல் போகிறது

புரதச்சத்து அதிகமாக உட்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதோடு சில வகை புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது

உடல் எடையை குறைப்பதற்காக மட்டும் பின்பற்றினாலும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கருதி பேலியோ டயட்டை நீண்ட நாட்களுக்கு பின்பற்ற பரிந்துரைப்பதில்லை

காரணம் அதன் அளவுக்கு அதிகமான புரோட்டீன் நுகர்வு ஒரு கட்டத்தில் கொழுப்புச் சத்தை அளவுக்கு அதிகமாக சேர்த்துவிடும். அதுவும் கெட்ட கொழுப்பின் சேமிப்பு அதிகமாகி இதயத்தை
கடுமையாக பாதிக்கும்

அதேபோல் பால் பொருட்களை தவிர்ப்பதால் உண்டாகும் கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்புப் புரை , எலும்பு முறிவு மற்றும் எலும்பு சார்ந்த இனும் பிற நோய்களை
அனுபவிக்கக் கூடும்

யாராக இருந்தாலும் பேலியோ டயட்டை பின்பற்ற நினைத்தால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைகளை பெறுவது நல்லது

பொதுவாக இதய நோய், சிறுநீரக பாதிப்பு , டைப் 1 நீரிழிவி நோயாளிகள் பேலியோ டயட்டை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com