குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 8 நன்மைகள்.!

Published November 18, 2025

குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிலுள்ள இரும்புச்சத்து, தாதுக்கள், கால்சியம், அமினோ அமிலங்கள், பாஸ்பரஸ், வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்

1

இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி நிறைந்த இது உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை துரிதப்படுத்தும். இதனால் ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள் இதை அன்றாடம் 2 என சாப்பிட்டு வரலாம்

2

பேரிச்சம்பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோஹார்மோன்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக வயதான பின் சருமம் சுருங்குவதை குறைத்து இளமையான சருமத்தை தக்கவைக்க உதவும்

3

துத்தநாகம், மெக்னீசியம், வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள இது டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பாலியல் செயல்பாட்டிற்கு முக்கியமான பிற ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதில் பங்கு வகிக்கின்றன

4

இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளை தடுக்கும். பெருங்குடல் தொடர்பான நோய்களையும் பேரிச்சம்பழத்தின் மூலம் நாம் தவிர்க்கலாம்

5

பேரிச்சம்பழத்திலுள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவையே உடனடி ஆற்றல் கிடைக்க உதவும் காரணிகள். இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்ப்பதே நல்லது

6

நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானம், இதய ஆரோக்கியம், உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

7

பேரிச்சையை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உடலில் ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் எலும்புகளை வலுப்படுத்தவும் பேரிச்சம்பழம் உதவுகின்றன

8

இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்

next

செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி… ரெசிபி இதோ.!

Click Here