114 கிலோவிலிருந்து 62 கிலோ வரை உடல் எடையை குறைத்த இன்ஸ்டா பிரபலம்..!

எடை அதிகரிக்கும் போது உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவை தவிர மூட்டு வலி, கால் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வருகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த சாரா லாக்கெட் என்ற 25 வயது பெண் 114 கிலோவிலிருந்து 62 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்

சாரா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த போதும், ​​குழந்தை பிறந்த பிறகும் எடை கூடிக் கொண்டே இருந்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு காண மருத்துவர்களைச் சந்தித்தபோது முதலில் சில வகையான அவருக்கு உடற்பயிற்சிகளைப் பரிந்துரைத்துள்ளனர். 

ஆனால் உடற்பயிற்சியினால் எந்த பலனையும் சாரா பெறவில்லை. அதனால் எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க அவர் இரைப்பை ஸ்லீவ் அறுவை சிகிச்சை (gastric sleeve surgery) செய்துகொண்டார்.

இந்த அறுவை சிகிச்சையில், அறுவைசிகிச்சை நிபுணர்கள் வயிற்றின் ஒரு பகுதியை அகற்றி, மீதமுள்ள பகுதிகளை ஒன்றாக இணைத்து புதிய வாழைப்பழ அளவுக்கு வயிற்றை அல்லது "ஸ்லீவ்" உருவாக்குவார்கள். 

இதனால் உங்கள் வயிர் சுருங்கிவிடும். நீங்கள் முன்பு போல் நினைத்தாலும் அதிகமாக சாப்பிட முடியாது. அதோடு உடல் எடை கூடாமலும் பார்த்துக்கொள்ளும். கூடுதலாக, அறுவை சிகிச்சையில் உங்களுக்கு பசியை அதிகரிக்க ஹார்மோனை உருவாக்கும் வயிற்றின் குறிப்பிட்ட உறுப்பும் நீக்கப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டால் உடல் எடை மிகவும் குறையும் என்று சொன்னதால் சாரா இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து உடலில் உள்ள கொழுப்பு முழுவதையும் அகற்றியுள்ளனர். அதன் மூலம் 62 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆன சாராவை பார்த்தது அவருடைய மகனுக்கே அடையாளம் காண முடியவில்லை. அக்கம் பக்கம் சுற்றத்தார்களும் அவரை பார்த்ததும் எப்படி இது சாத்தியம் என ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுவரை எங்கு சென்றாலும் வெட்கமாகவும், கூச்சமாகவும் இருந்ததாகவும், ஆனால் இப்போது நான் தன்னம்பிக்கையுடன் உணர்கிறேன் என்று சாரா கூறியுள்ளார். மேலும், சாரா தற்போது மாடலிங் செய்து வருகிறார். 

டிஜிட்டல் கிரியேட்டராகவும் வலம் வரும் சாராவுக்கு இன்ஸ்டாகிராமில் 80,000க்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். அதில் உடற்பயிற்சி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ஃபேஷன் தயாரிப்புகளுக்கான விளம்பரங்களிலும் நடிக்கிறார்.

சாராவுக்கு உணவின் மூலம் உடல் எடை அதிகரிக்கவில்லை. அவருக்கு ப்ரீக்ளாம்ப்சியா மற்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் இருந்துள்ளது. அதன் காரணமாக, தினமும் 3 ஆயிரம் கலோரிகளுக்கு மேல் சாப்பிட வேண்டியிருந்ததால் எடை கூடியுள்ளது.

செப்டம்பர் 2021ல் சாராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் எந்த பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை. 

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com