ஒரே படத்தில் அறிமுகமாகும் பெஸ்ட் ஃப்ரண்டஸ் 

ஜீ தமிழ் சீரியல் நடிகைகளான ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

செம்பருத்தி சீரியல் மூலம் புகழடைந்த ஷபானா இப்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார்

அதே போல் ஜீ தமிழின் பூவே பூச்சூடவா தொடரின் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் சீரியலில் நடித்தார் 

பகையே காத்திரு என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரேஷ்மா மற்றும் ஷபானா இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இவர்கள் இருவரும் பயங்கர க்ளோஸ் ஃப்ரண்டஸ் என்பது அனைவருக்கும் தெரியும்

சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி இருந்தனர்

இந்நிலையில் இவர்களின்  வெள்ளித்திரை அறிமுகமும் ஒரே படத்தில் அமைந்துள்ளது. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது

ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com