அர்ச்சனாவின் பிக் பாஸ் பயணம் குறித்து மனம் திறந்த அர்ச்சனா மகள் ஜாரா!

அம்மா அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4 க்கு சென்றது எனக்கு பிடிக்கவில்லை என அர்ச்சனாவின் மகள் ஜாரா தெரிவித்துள்ளார்

 பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட ட்ரோல்களை, நெகடிவ் கமெண்டுகளை அர்ச்சனா சந்தித்தது குறிப்பிடத்தக்கது

சின்னத்திரையில் மூத்த ஆங்கராக வலம் வரும் அர்ச்சனா இப்போது விஜய் டிவியில் இருந்து மீண்டும் ஜீ தமிழுக்கு சென்றுள்ளார். இவர் தனது மகள் ஜாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்து வருகிறார்

அர்ச்சனாவின் இந்த திடீர் மாற்றம் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து இருந்தது. இணையத்தில் பலரும் விஜய் டிவியில் இருந்து உங்களை துரத்தி விட்டார்களா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தனர்

அந்த பேட்டியில் பல விஷயங்களை இருவரும் ஷேர் செய்துள்ளனர். அப்போது ஜாராவிடம் அர்ச்சனா செய்ததில் பிடித்தது மற்றும் பிடிக்காதது குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது.

Heading 2

இதற்கு பதில் கூறிய ஜாரா, ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மா பேட்டி எடுத்தது மிகவும் பிடித்தது ”என்று கூறினார். பிடிக்காதது , அம்மா பிக் பாஸ் போனது என பொசுக்குன்னு சொல்லிவிட்டார்.

பிக் பாஸ் 4ல் அர்ச்சனா உண்மையாக இருந்ததால் தான் அவருக்கு இவ்வளவு நெகட்டிவ் கமெண்டுகள் கிடைத்ததாகவும் என் அம்மாவை பற்றி எனக்கு தெரியும் வெறும் அந்த 40 நிமிடத்தை பார்த்து விட்டு எல்லோரும் ஜட்ஜ் செய்தார்கள், நாங்க தான் அனுப்பி வச்சோம்

ஜாராவின் இந்த பதில் அர்ச்சனாவை பிக் பாஸில் தவறாக காட்டி விட்டது போல் இருந்தது. இதையும் ரசிகர்கள் விமர்சிர்த்துள்ளனர்.

விஜய் டிவியை விட்டு போனதும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி அர்ச்சனா - ஜாரா பேசி இருப்பதாக ரசிகர்கள் பதில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com