ரவீந்தரை
 மறைமுகமாக விமர்சித்த
 வனிதா விஜயக்குமார்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை மறைமுகமாக தாக்கியுள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்

சில தினங்கள் முன்பு சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்

அவர்களின் திருமணம் இணையத்தில் காட்டு தீ போல பரவியது. அதோடு திருமண படங்களும் வைரலானது

தற்போது ரவீந்தர் சந்திரசேகரனை மறைமுகமாக தாக்கியுள்ளார் நடிகை வனிதா விஜயக்குமார்

வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துக் கொண்ட போது, அதனை கடுமையாக விமர்சித்தார் ரவீந்தர் சந்திரசேகரன்

இருவருக்கும் இணையத்தில் நேரலையில் கருத்து மோதல் ஏற்பட்டு, பரபரப்பை கிளப்பியது

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வனிதா, ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பிஸியாகவும் இருக்கிறேன்

கர்மாவுக்கு  திருப்பி கொடுக்க தெரியும் .. நான் அவளை முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com