குழந்தையின் படத்தை வெளியிட்ட செளந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா, தனது இரண்டாவது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு விசாகன் வணங்காமுடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் செளந்தர்யா

செளந்தர்யாவுக்கு ஏற்கனவே வேத் என்ற மகன் இருக்கிறான்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் செளந்தர்யா கர்ப்பமடைந்ததாக செய்திகள் வெளியாகின

இருப்பினும் அதனை உறுதிப்படுத்தாமல் இருந்தார் செளந்தர்யா

இதற்கிடையே கடந்த வாரம் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை இன்ஸ்டகிராமில் அறிவித்த செளந்தர்யா, குழந்தைக்கு வீர் எனப் பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார்

இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன

இந்நிலையில் தற்போது தனது குழந்தை மற்றும் அப்பா ரஜினிகாந்துடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார் செளந்தர்யா. அதில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டிருக்கிறது

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com