சிம்பு தான் தகுதியான பேச்சிலர் - VTK பட நடிகை ஓபன் டாக்!

தமிழ் நாட்டில் தற்போது தகுதியான பேச்சிலர்னா அது சிம்பு தான் என்று வெந்து தணிந்தது பட நாயகி சித்தி இட்னானி தெரிவித்துள்ளார்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது

நேற்று வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார்

சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்

அப்போது அவரிடம், "காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொடுப்பீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது

அதற்கு பதிலளித்த சித்தி இட்னானி, தமிழகத்தின் தகுதியான 'பேச்சிலர்' சிம்புதான்  என்றார் 

காதல் ரோஜாக்களை அவரிடம்தான் கொடுப்பேன் என்றும் தெரிந்தார்

மேலும் சிம்பு விரைவில் திருமண பந்ததில் இணைய வேண்டும் என்றும் அவருக்கான ஜோடி அவருடன் விரைவில் வந்து இணைய கடவுளிடன் வேண்டிக் கொள்வதாகவும் சித்தி இட்னானி தெரிவித்துள்ளார்

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com